AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஏழு கடல் ஏழு மலை படத்தின் கேரள ரிலீஸ் உரிமையைப் பெற்றது பிரபல நிறுவனம்

Yezhu Kadal Yezhu Malai | மலையாள சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் நிவின் பாலி நடிப்பில் தமிழ் சினிமாவில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஏழு கடல் ஏழு மலை. இந்தப் படத்தின் கேரள வெளியீட்டு உரிமையைப் பிரபல தயாரிப்பு நிறுவனம் பெற்றுள்ளது.

ஏழு கடல் ஏழு மலை படத்தின் கேரள ரிலீஸ் உரிமையைப் பெற்றது பிரபல நிறுவனம்
ஏழு கடல் ஏழு மலைImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 22 Sep 2026 14:34 PM IST

மலையாள சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் நிவின் பாலி. இவர் தொடர்ந்து மலையாள சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வரும் நிலையில் அவ்வபோது தமிழ் சினிமாவில் படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் மலையாள சினிமாவில் இந்த 2026-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து இதுவரை அடுத்தடுத்து 3 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அதன்படி முதலாவதாக பேபி கேர்ள், இரண்டாவதாக பிரதிச்சாயா மற்றும் மூன்றாவதாக பெத்தலேகம் குடும்ப யூனிட். இதில் முதல் இரண்டு படங்களான பேபி கேர்ள் மற்றும் பிரதிச்சாயா படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றாலும் இறுதியாக மலையால சினிமாவில் வெளியான பெத்தலேக குடும்ப யூனிட் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் மலையாள சினிமாவில் இதுவரை வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற புதிய சாதனையும் படைத்துள்ளது இந்த பெத்தலேக குடும்ப யூனிட். இந்தப் படங்களை தொடர்ந்து நடிகர் நிவின் பாலி நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஏழு கடல் ஏழு மலை. தமிழ் மொழியில் உருவாகி உள்ள இந்தப் படத்தை இயக்குநர் ராம் எழுதி இயக்கி உள்ளார்.

ஏழு கடல் ஏழு மலை கேரள ரிலீஸ் உரிமையைப் பெற்றது பிரபல நிறுவனம்:

மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் அஞ்சலி மற்றும் சூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர். படத்தின் பணிகள் முன்பே முடிந்து இருந்தாலும் பல நாடுகளில் நடைப்பெற்ற ஃபிலிம் பெஸ்டிவல்களில் ஒளிபரப்பட்டு பல விருதுகளையும் பாராட்டுகளையும் இந்த ஏழு கடல் ஏழு மலை பெற்றுள்ளது. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் இந்தப் படம் வருகின்ற அக்டோபர் மாதம் 01-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் இந்தப் படத்தின் கேரள ரிலீஸ் உரிமையை நடிகர் துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனமான வேஃபரர் ஃபிலிம்ஸ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… பரோட்டா சூரி என்பது இல்லவே இல்ல.. என் பேரு சூரி மட்டும்தான் – விளக்கமளித்த சூரி!

நடிகர் நிவின் பாலி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி 3-வது வாரம் மோதலுடன் தொடங்கியுள்ளது – வைரலாகும் புரோமோ வீடியோ

Follow Us