AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

டாஸ்கில் மோதிக்கொண்ட ஷமா – ஜேசன்… இவ்வளவு கோபம் எதற்கு? கேள்வி எழுப்பிய விஜய் சேதுபதி

Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடைப்பெற்ற டாஸ்கில் ஷமா மற்றும் ஜேசன் இடையே மோதல் ஏற்பட்டது. அதுகுறித்து இன்றைய எபிசோடில் நடிகர் விஜய் சேதுபதி கேள்வி எழுப்புவது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.

டாஸ்கில் மோதிக்கொண்ட ஷமா – ஜேசன்… இவ்வளவு கோபம் எதற்கு? கேள்வி எழுப்பிய விஜய் சேதுபதி
பிக்பாஸ் தமிழ் சீசன் 10Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 20 Sep 2026 10:52 AM IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 (Bigg Boss Tamil Season 10) நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து தொடர்ந்து டாஸ்குகள் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு நாளும் புதுப் புதுப் டாஸ்குகள் வழங்கப்படும் போது வீட்டில் உள்ள போட்டியாளர்களிடையே போட்டியும் அதிகரித்து வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த 06-ம் தேதி செப்டம்பர் மாதம் 2026-ம் ஆண்டு இந்த நிகழ்ச்சி மிகவும் பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. மொத்தம் 19 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை மூன்று பேர் வெளியேறியுள்ளனர். அதில் ஒருவர் ப்ளாக் பாண்டி இவர் உடல்நலக் குறைவு காரணமாக பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். அதனைத் தொடர்ந்து இரண்டு போட்டியாளர்கள் வைல்கார்ட் போட்டியாளர்களாக பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சிக்குள் அனுப்பப்பட்டனர். அதன்படி தற்போது 18 போட்டியாளர்கள் உள்ளனர்.

கடந்த வாரம் நடைப்பெற்ற கதை சொல்லட்டா டாஸ்கில் சக போட்டியாளர்களிடையே வரவேற்பைப் பெற தவறிய ஜாவித் வீட்டில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் டாஸ்கில் நடைப்பெற்ற விசயங்கள் குறித்து விஜய் சேதுபதி தொடர்ந்து பேசி வருகிறார். இன்று ஜேசனிடம் பேசும் வீடியோ வெளியாகி உள்ளது.

டாஸ்கில் மோதிக்கொண்ட ஷமா – ஜேசன்… இவ்வளவு கோபம் எதற்கு?

அதன்படி கடந்த வாரம் நடைப்பெற்ற டாஸ்கில் சீஸ் ரூமில் யார் நிற்பது என்ற போட்டியில் ஷமா மற்றும் ஜேசன் இருவரும் மிகவும் கடுமையாக விளையாடினர். அதில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அப்படி விளையாடியது சரியா என்று ஷமா மற்றும் ஜேசனிடம் விஜய் சேதுபதி கேள்வி எழுப்புகிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Also Read… பிக்பாஸிலிருந்து போட்டியாளர்களால் எவிக் செய்யப்பட்டது யார்?

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… இது பொல்லாத உலகம்டா தம்பி… ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கும் டோரோத்தி பட ட்ரெய்லர்!

Follow Us