AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இது பொல்லாத உலகம்டா தம்பி… ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கும் டோரோத்தி பட ட்ரெய்லர்!

Dorothy movie tamil official trailer | இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 10-வது படமாக உருவாகி உள்ளது டோரோத்தி படம். இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் டோரோத்தி படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.

இது பொல்லாத உலகம்டா தம்பி… ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கும் டோரோத்தி பட ட்ரெய்லர்!
டோரோத்திImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 19 Sep 2026 11:07 AM IST

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். கடந்த 2012-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியானது பீட்சா படம். இந்தப் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்குநராக அறிமுகம் ஆனதில் இருந்து தொடர்ந்து இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ஹிட் படங்களை இயக்கி தமிழ் சினிமா ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றவர் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். இவரது இயக்கத்தில் இறுதியாக தமிழ் சினிமாவில் வெளியான படம் ரெட்ரோ. நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் எழுதி இயக்கி உள்ள படம் டோரோத்தி. இந்தப் படம் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகும் பத்தாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் தொடர்பான அப்டேட் வெளியானதில் இருந்து தொடர்ந்து ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ள நிலையில் படம் வருகின்ற 25-ம் தேதி செப்டம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கும் டோரோத்தி பட ட்ரெய்லர்:

இந்த டோரோத்தி படம் திரையங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தப் படத்தில் நடிகர்கள் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் மற்றும் முத்துகுமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்தின் ட்ரெய்லரைப் பார்த்த ரசிகர்கள் படம் நிச்சயமாக சிறப்பாக இருக்கும் என்று தெரிவித்ததுடன் கார்த்திக் சுப்பராஜ் ஒரு சிறப்பான சம்பவத்தை உருவாக்கி உள்ளார் என்று தெரிவித்து வருகின்றனர். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… இந்தப் படத்தின் மூலம் அனிருத்தின் இசைப் பயணம் மாறும் – நடிகர் கமல் ஹாசன்

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… பிக்பாஸ் தமிழில் கேப்டன் மீது அதிருப்தியில் இருக்கும் போட்டியாளர்கள் – வைரலாகும் தகவல்

Follow Us