பிக்பாஸ் தமிழ் போட்டியாளர்களிடையே வலுக்கும் மோதல்… வைரலாகும் தகவல்!
Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கி தற்போது இரண்டாவது வாரத்தில் இருக்கும் போதே போட்டியாளர்களிடையே மோதல்கள் அதிகரித்து உள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி இணையத்தில் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து டாஸ்குகள் வழங்கப்பட்டு வருகின்றது. கடந்த முதல் வாரமே பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு நிகழ்ச்சியின் மீது ஆர்வம் ஏற்பட காரணம் பிக்பாஸ் வீட்டில் பல டாஸ்குகள் வழங்கப்பட்டதே. மேலும் 24 மணி நேரமும் ஓடிடியில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கலாம் என்று முன்பு அறிவிக்கப்பட்ட போது முந்தைய சீசன்களில் இரவு நேரங்களில் போட்டியாளர்கள் உறங்குவது அல்லது யாரேனும் பேசிக்கொண்டு இருந்தால் அதுதான் காட்டப்படும். இப்படி இருக்கும் சூழலில் இந்த 10-வது சீசனில் இரவு நேரம் பார்க்கும் பார்வையாளர்களுக்கும் கண்டெண்ட் இருக்க வேண்டும் என்பதற்காக குழு ஒரு முடிவு செய்து நைட் டாஸ்க் என்ற ஒன்றை அறிமுகம் செய்தது. அந்த டாஸ்கில் இருக்கும் போட்டியாளர்கள் இரவு முழுவதும் தூங்காமல் பொழுதுபோக்கிறாக ஏதேனும் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இப்படி இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் பல டாஸ்குகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக வீட்டில் உள்ள போட்டியாளர்களிடையே போட்டியும் அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு எபிசோடிலும் வீட்டில் உள்ளவர்களிடையே சலசலப்பு ஏற்படுவதை பார்வையாளர்கள் பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது.




பிக்பாஸில் தமிழ் போட்டியாளர்களிடையே வலுக்கும் மோதல்:
இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கி தற்போது இரண்டாவது வாரம் மட்டுமே ஆகியுள்ள நிலையில் ஃபைனல்ஸ்கு நடைபெறும் டாஸ்குகள் போல இந்த போட்டி செல்கிறது. இதன் காரணமாக பிக்பாஸ் போட்டியாளர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்படுகின்றது. இதில் நேற்றைய டாஸ்கில் நாக்கவுட் என்ற ஒன்று கொடுக்கப்படுகின்றது. இதில் இரே அணியில் உள்ள லக்ஷ்மி பிரியா மற்றும் ஆனந்தி இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது முதல் புரோமோ வீடியோவில் வெளியாகி உள்ளது. அது தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Also Read… தலைமை பண்பு குறித்து பேசிய விஜய் சேதுபதி – சர்ச்சைக்கு விஜய் டிவி விளக்கம்
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day10 #Promo1 of #BiggBossTamil
Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision pic.twitter.com/pFaAomiCz5
— Vijay Television (@vijaytelevision) September 16, 2026
Also Read… பிக்பாஸில் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் ஆனந்தி – லக்ஷ்மி பிரியா… வைரலாகும் வீடியோ