பிரபல பாடகியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கும் ராஷ்மிகா மந்தனா? வைரலாகும் தகவல்
Rashmika Mandanna is reportedly set to act biography movie | தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் அடுத்ததாக நடிக்க உள்ள படம் ஒரு பயோகிராஃபி படம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.
கன்னட சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நடிகை ராஷ்மிகா மந்தனா பிறகு தெலுங்கு சினிமாவில் படங்களில் தொடர்ந்து நடிக்கத் தொடங்கினார். இவர் தெலுங்கு சினிமாவில் படங்களில் நடிக்கத் தொடங்கிய பிறகு தொடர்ந்து அதிக அளவில் தெலுங்கு மொழியிலேயே படங்களில் நடித்து வந்தார். மேலும் இவரது நடிப்பில் தெலுங்கு சினிமாவில் வெளியான படங்கள் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தெலுங்கு மொழியில் நடிகை ராஷ்மிகாவின் தாய் மொழி என்று அவரை தெரியாதவர்கள் என்னும் அளவிற்கு அவர் அந்த மொழி பெண்ணாகவே வாழ்ந்து வருகிறார். அது மட்டும் இன்றி அவர் பலப் படங்களில் இணைந்து நடித்த நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்துக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர்கள் இருவரும் சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரணபாலி என்ற படத்தில் இணைந்து நடித்து உள்ளனர். இந்தப் படம் வருகின்ற அக்டோபர் 16-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் இந்தப் படத்தின் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. அந்த வகையில் அந்தப் படம் மட்டும் இன்றி விறுவிறுப்பாக மற்றப் படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா.
பிரபல பாடகியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கும் ராஷ்மிகா:
இந்த நிலையில் சமீபத்தில் சினிமா வட்டாரங்களில் வெளியான தகவலின்படி தெலுங்கு சினிமாவில் நடிகர் நானியின் நடிப்பில் உருவாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது ஜெர்சி படம். இந்த பட இயக்குனர் கௌதம் தின்னனூரி இயக்கத்தில், இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பில் உருவாகவுள்ள இசை சார்ந்த வாழ்க்கை வரலாற்றுப் படம். அந்தப் படத்தில் புகழ்பெற்ற எம். எஸ். சுப்புலட்சுமியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஒரு சுவாரஸ்யமான கூட்டணி என்றும் இந்த கூட்டணி இணைந்தால் சிறப்பாக இருக்கும் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
BUZZ: #RashmikaMandanna is reportedly set to play the legendary M. S. Subbulakshmi in a musical biopic, directed by #Jersery director Gowtam Tinnanuri with music by #Anirudh..⭐ Interesting combo..🤝 pic.twitter.com/amOrbshZAG
— Laxmi Kanth (@iammoviebuff007) September 12, 2026
Also Read… பல ஆண்டுகள் நட்பு.. அஜித் குமாரை சந்தித்த முதல்வர் விஜய் – தீயாய் பரவும் வீடியோ!



