AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

எனது அழைப்பை ஏற்று… முதல்வர் விஜய் லண்டன் பயணம் குறித்து அஜித் பேட்டி

Ajith Congratulates CM Vijay : லண்டனில் செப்டம்பர் 12, 2026 நாளை நடைபெறும் கார் பந்தயத்தை முதல்வர் விஜய் துவங்கி வைக்கவுள்ள நிலையில், இது தொடர்பாக நடிகர் அஜித் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தனது பிஸியான ஷெட்யூலிலும் நேரம் ஒதுக்கி முதல்வர் விஜய் லண்டன் வந்துள்ளார். என்றார்.

எனது அழைப்பை ஏற்று…  முதல்வர் விஜய் லண்டன் பயணம் குறித்து அஜித் பேட்டி
அஜித் குமார் - முதல்வர் விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Published: 11 Sep 2026 21:11 PM IST

முதல்வர் விஜய் பல்வேறு முதலீடுகளை ஈர்ப்பதற்காக 6 நாட்கள் பயணமாக லண்டன் சென்றுள்ளார். இந்த நிலையில் லண்டனில் நடிகர் அஜித் ஆகஸ்ட் 12, 2026 அன்று பங்கேற்கவிருக்கும் மைக்கேலின் லே மான்ஸ் கப் கார் பந்தயத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார். இந்த நிலையில் லண்டனில் தான் பங்கேற்கவிருக்கும் கார் ரேஸ் குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், விஜய் முதல்வரானது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

முதல்வர் விஜய் லண்டன் பயணம் குறித்து அஜித் பேட்டி

இதுகுறித்து பேசிய அஜித் குமார், தனது பிஸியான ஷெட்யூலிலும் நேரம் ஒதுக்கி முதல்வர் விஜய் லண்டன் வந்துள்ளார். விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதற்காக நிறைய செய்கிறார். இந்தியாவில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறையை மேம்படுத்த தமிழக அரசு முயற்சிக்கிறது. மோட்டார் ஸ்போர்ட்ஸ் போன்ற அனைத்தும் இந்தியாவில் வர வேண்டும் என்பதே என் விருப்பம் என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க : Seyon: மனமா படையல் தயாராகிட்டு இருக்கு… சிவகார்த்திகேயனின் சேயோன் பட 2வது ஷெட்யூல் ஷூட்டிங் நிறைவு!

மேலும் பேசிய அவர், எனது அழைப்பை ஏற்று வந்ததில் மகிழ்ச்சி, லண்டனில் உள்ள ‘சில்வர் ஸ்டோன்’ ரேஸிங் டிராக் போன்றதை சென்னையில் உருவாக்க முதலமைச்சர் விஜய் ஆர்வமாக உள்ளார். எனக்கும் லண்டனில் நடப்பது போன்ற போட்டிகள் சென்னையில் நடைபெற வேண்டும் என்ற ஆசை என்று தெரிவித்தார். இந்த நிலையில் செப்டம்பர் 12, கார் பந்தயத்தில் அஜித் மற்றும் முதல்வர் விஜய் சந்திக்கவிருப்பது அவர்களது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்களை சந்தித்த நடிகர் அஜித்

 

 

இந்த நிலையில் அஜித்குமார் ரேஸிங் அணி 2026 மிட்செலின் லே மேன்ஸ் கப் தொடரில் LMP3 Pro/Am பிரிவில் போட்டியிட்டு வருக்கிறது. சில்வர்ஸ்டோன் ரவுண்டில் மொத்தம் 44 கார்கள் பங்கேற்க உள்ள நிலையில், வரும் செப்டம்பர் 12, 2026 அன்று சனிக்கிழமை முக்கிய பந்தயம் நடைபெற உள்ளது.

இதையும் படிக்க : கௌதம் கார்த்திக்கின் பிளடி பாலிடிக்ஸ் பட டீசர் ரிலீஸ் எப்போது தெரியுமா?

இது தொடர்பாக மைக்கேலின் லே மான்ஸ் கப் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், இந்த வார இறுதியில் செப்டம்பர் 12, 2026 சனிக்கிழமை இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோனில் நடைபெற உள்ள மைக்கேலின் லே மான்ஸ் கப் ( Michelin Le Mans Cup) கார் பந்தயத்தில், தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். இந்த பந்தயத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கும் வகையில், 44 கார்கள் கொண்ட கிரிட் முன்பு முதல்வர் விஜய் பச்சைக் கொடியை அசைக்க உள்ளதாக Michelin Le Mans Cup தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Follow Us