AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Ajith Kumar: லண்டனில் கார் ரேஸ்.. தனது அணியுடன் தயாரான அஜித் குமார் – வைரலாகும் வீடியோ!

Ajith Kumar Car race: சினிமாவில் நடிகராக நுழைந்து பல ஹிட் படங்களை கொடுத்தவர் அஜித் குமார். இவர் தற்போது இந்தியாவின் சார்பாக பல்வேறு நாடுகளில் நடக்கும் கார் ரேஸ் போட்டியில் கலந்துகொள்கிறார். இந்நிலையில் நாளை (12/09/2026) லண்டனில் நடக்கும் நிலையில், அந்த போட்டிக்காக அஜித் தனது அணியினருடன் தயாராகவும் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

Ajith Kumar: லண்டனில் கார் ரேஸ்.. தனது அணியுடன் தயாரான அஜித் குமார் – வைரலாகும் வீடியோ!
அஜித் குமார்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 11 Sep 2026 15:49 PM IST

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் அஜித் குமார் (Ajith Kumar). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இவரின் நடிப்பில் இறுதியாக தமிழில் வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி (Good Bad Ugly). இந்த படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் (Aadhik Ravichandran) இயக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமானது தயாரித்திருந்தது. இப்படமானது கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் வரவேற்பை பெற்றது. 2024ம் ஆண்டு இறுதியில் இப்படத்தின் ஷூட்டிங்கை முடித்த அஜித் குமார், கார் ரேஸ் (Car Race) போட்டிகளில் பங்பெற்றுவருகிறார். கடந்த 2024ம் ஆண்டு இறுதி முதல் கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்ட அஜித் குமார், கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் கார் ரேஸ் பயிற்சியில் இருக்கிறார்.கிட்டத்தட்ட 6 நாடுகளில் நடந்த கார் ரேஸ் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி கோப்பைகளை பெற்றுள்ளார்.

மேலும் வரும் 2026ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதியில் லண்டனில் நடக்கும் லீ மான்ஸ் போட்டியில், தனது அணியுடன் அஜித் கலந்துகொள்கிறார். இந்த நிகழ்ச்சியை தமிழக முதல்வர் விஜய், பச்சைக்கொடி அசதைத்து தொடக்கிவைப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியாகியிருந்தது. அந்த விதத்தில் இந்த போட்டிக்காக அஜித்தின் அணி தீவிரமாக பயிற்சியில் இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: நாளை வெளியாகிறது ஹிப்ஹாப் ஆதியின் மீசையமுறுக்கு 2 பட ட்ரெய்லர்!

தீவிரமான பயிற்சியில் ஈடுபடும் அஜித் குமார் குறித்த வைரல் வீடியோ பதிவு:

அஜித் குமார் கலந்துகொள்ளவுள்ள ரேஸ் போட்டியானது, இங்கிலாந்தில் உள்ள புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் பந்தயத் திடலில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் அஜித் குமாரின் அணியுடன் பல அணிகளும் இணைந்து கலந்துகொள்கின்றனர். அந்த விதத்தில் இந்த போட்டியை தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள், துவக்கிவைப்பதாக அறிவிப்பும் சமீபத்தில் வெளியாகியிருந்தது.

இதையும் படிங்க: டிசி பட மாபெரும் ஹிட்.. படக்குழுவினருக்கு உயர்ரக BMW காரை பரிசாக வழங்கிய கலாநிதிமாறன்!

இந்நிலையில் சினிமாவை கடந்த நட்பு, தற்போது தமிழக முதல்வராக விஜய்யும், கார் ரேஸ் போட்டியாளராக அஜித்தும் ஒருவரையொருவர் பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சந்திக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித்தின் இந்த போட்டியானது 2026ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதியில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின்போது அஜித் மற்றும் முதல்வர் விஜய் இணைந்து இருக்கும் புகைப்படங்கள் வெளியாகும் என தமிழ் ரசிகர்கள் ஆரவாரத்துடன் காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us