AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

டிசி பட மாபெரும் ஹிட்.. படக்குழுவினருக்கு உயர்ரக BMW காரை பரிசாக வழங்கிய கலாநிதிமாறன்!

Kalanithi Marans BMW Car Gifts: தென்னிந்திய சினிமாவில் மாபெரும் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருந்துவருவதுதான் சன் பிக்ச்சர்ஸ். இந்நிறுவனத்தின் கீழ் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வரவேற்பை பெற்ற படம் டிசி. இப்படத்தின் வெற்றியை முன்னிட்டு தயாரிப்பாளர் கலாநிதிமாறன், படக்குழுவுக்கு BMW கார்களை பரிசாக வழங்கியுள்ளார்.

டிசி பட மாபெரும் ஹிட்.. படக்குழுவினருக்கு உயர்ரக BMW காரை பரிசாக வழங்கிய கலாநிதிமாறன்!
டிசி படக்குழுவுக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசுImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 11 Sep 2026 12:09 PM IST

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) ஹீரோவாக அறிமுகமான முதல் திரைப்படம்தான் டிசி (DC). இதை இயக்குநர் அருண் மாதேஷ்வரன் (Arun Matheshwaran) இயக்கியிருந்த நிதியில், சன் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் கலாநிதிமாறன் உருவாக்கியிருந்தார். லோகேஷ் கனகராஜ் இயக்குநராக பல படங்களை இயக்கி ஹிட் கொடுத்திருந்தார். அந்த வரிசையில் இவர் ஹீரோவாக அறிமுகமான முதல் படம்தான் டிசி. அருண் மாதேஸ்வரன் இயக்குநராக இப்படத்தை இயக்கியிருந்த நிலையில், 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 07ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. கிட்டத்தட்ட ரூ 40 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் உலகளவில் சுமார் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூலித்திருந்தது.

இப்படம் வெளியாகி சூப்பர் ஹிட்டான நிலையில் ஓடிடியில் தற்போது ஸ்ட்ரீம் செய்யப்பட்டுவருகிறது. இந்நிலையில் இப்படம் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றிருந்த நிலையில், இப்படக்குழுவுக்கு தயாரிப்பாளர் கலாநிதிமாறன் (Producer Kalanithimaran) உயர் ரக BMW கார்களை பரிசாக வழங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோவை படக்குழு பகிர்ந்துள்ளது.

இதையும் படிங்க: பெண்கள் ஆரோக்கியம்.. சமூக சேவையில் சிறந்து விளங்கும் அல்லு அர்ஜுனின் ரசிகர்கள்

டிசி படக்குழுவுக்கு BMW கார்களை பரிசாக வழங்கிய தயாரிப்பாளர் கலாநிதிமாறன்:

டிசி திரைப்படமானது மாபெரும் வெற்றியை பெற்றிருந்த நிலையில், சிறப்பான வசூலையும் பெற்றிருந்தது. அதற்கு இப்படக்குழுவுக்கு பரிசு வாங்மக நினைத்த தயாரிப்பாளர், உயர் ரக BMW கார்களை பரிசாக வழங்கியுள்ளார். அனிருத், லோகேஷ் கனகராஜ் மற்றும் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் மூவருக்கும் BMW கார்களை பரிசாக வழங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: சூர்யாவின் சீன் பட இயக்குநர் ஜித்து மாதவனின் முந்தைய படங்களை பார்த்து இருக்கீங்களா?

மீண்டும் இணைகிறதா டிசி பட கூட்டணி:

இந்த டிசி திரைப்படமானது மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படம் திரையரங்குகளில் வெற்றிபெற்றிருந்த நிலையில், தற்போது சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்பட்டுவருகிறது. இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் இருக்கிறது. மேலும் இப்படத்தின் வெற்றி கூட்டணி மீண்டும் இணைகிறதாம். இந்த படத்தையும் சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us