Ajith Kumar: டேர் டெவில் படத்திற்காக.. மாஸாக ஒர்கவுட் செய்யும் அஜித் – வைரலாகும் வீடியோ!
Ajith Workout Video: தென்னிந்திய சினிமா வட்டாரங்களில் புகழ்பெற்ற நடிகராக இருந்தவருபவர் அஜித் குமார். இவர் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் டேர் டெவில் என்ற திரைப்படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார். இப்படத்திற்காக தனது உடலை அஜித் திடப்படுத்தும், ஒர்கவுட் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
தல அஜித் குமார் (Ajith Kumar) சினிமாவில் கடைசியாக நடித்திருந்த திரைப்படம் குட் பேட் அக்லி (Good Bad Ugly). கடந்த 2025ம் ஆண்டில் வெளியாகியிருந்த இப்படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் (Aadhik Ravichandran) இயக்கியிருந்தார். இவரின் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படமானது மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. கடந்த 2025ம் ஆண்டில் வெளியான இப்படம், அஜித்தின் சினிமா வாழ்க்கையிலே அதிகம் வசூல் செய்த ஹிட் படமாக அமைந்தது. இந்த படத்தில் அஜித் மற்றும் திரிஷா இணைந்து நடிக்க, கிட்டத்தட்ட ரூ 250 கோடிகளுக்கு மேல் வசூலித்திருந்ததாம். இந்த படத்தின் வெற்றிக்கு பின், அஜித் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரனின் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. ஆரம்பத்தில் AK64 என அழைக்கப்பட்டுவந்த இப்படத்திற்கு படக்குழு, “டேர் டெவில்” (Dare Devil) என டைட்டில் வைத்துள்ளது.
இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியிருந்தது. இந்நிலையில், இப்படத்திற்காக அஜித் குமார் தனது உடலை தயார் செய்யும், ஜிம் ஒர்கவுட் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: விஜய் சேதுபதியின் ட்ரெயின் படத்தின் சென்சார் அப்டேட் வெளியானது
அஜித் குமாரின் ஜிம் ஒர்கவுட் தொடர்பாக வைரலாகும் வீடியோ பதிவு:
The Dare Devil is rewriting the rules of fitness🔥His comeback is the ultimate destruction😈💥#AjithKumar #Ak64#DareDevil pic.twitter.com/SkH0eJLH5Z
— Nethra🖤 (@Mystic_Realm25) August 13, 2026
நடிகர் அஜித் குமார் கார் ரேஸ் பயிற்சியில் ஒரு புறம் பிசியாக இருந்தாலும், மற்றொருபுறம் தனது நடிப்பின் மீதும் ஆர்வம் காட்டிவருகிறார். கிட்டத்தட்ட 1 ஆண்டுக்கும் மேலாக அவர் படங்களில் நடிக்காமல் முழுவதுமாக கார் ரேஸ் பயிற்சியில் இருந்துவிட்டார். அந்த வகையில், தற்போது தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் கீழ், புதிய படமான டேர் டெவில் என்ற படத்தில் அஜித் நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க, அனிருத் இசையமைக்கிறார்.
இதையும் படிங்க: அதிக செல்போன் பயன்பாடு.. நடிகை ஷகிலாவிற்கு அறுவை சிகிச்சை
இவரின் இசையில் சிறப்பான படமாக இது உருவாக்கப்படவுள்ளதாம். ஒரு பேமிலி பொழுதுபோக்கு மற்றும் ஆக்ஷன் அதிரடி கதையில் இது உருவாகிறதாம். அந்த வகையில் இன்னும் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கவில்லை. இப்படத்தின் ஷூட்டிங்கிற்கு முன்பு நடிகர் அஜித் தனது உடலை தயார் செய்யும், ஜிம் ஒர்கவுட் வீடியோ தீயாக பரவிவருகிறது. அஜித் நெருப்பாக தனது ஒர்கவுட்டில் கவனம் செலுத்திவரும் வீடியோ, அவரின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. இவர் புதிதாக நடிக்கவுள்ள டேர் டெவில் படத்தின் ஷூட்டிங் 2026ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.