அஜித் குமாரின் டேர் டெவில் படத்தில் இணையும் மாபெரும் நடிகர்கள்.. அட இவர்களா?
Ajith Kumars Dare Devil: ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கவுள்ள 64வது திரைப்படம்தான் டேர் டெவில். இதன் அறிவிப்புகள் சமீபத்தில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றது. இப்படத்தின் ஷூட்டிங் 2026 செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் நிலையில், இதில் மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவின் பிரம்மாண்ட நடிகர்கள் இணைவதாக தகவல்.
தென்னிந்திய திரைத்துறையில் சிறந்த நாயகனாக இருந்துவருபவர் அஜித் குமார் (Ajith Kumar). இவர் சினிமாவில் வேறும் நடிகராக மட்டுமல்லாமல், இந்தியாவின் சார்பாக பல்வேறு நாடுகளில் நடக்கும் கார் ரேஸ் பந்தயங்களில் தனது அணியுடன் கலந்துகொண்டு இருக்கிறார். இதுவரை கிட்டத்தட்ட 6-க்கும் மேற்பட்ட ரேஸ் போட்டிகளில் தனது அணியினருடன் அஜித் கலந்துகொண்டு வருகிறார். தற்போது மேலும் கார் ரேஸ் (Car Race) பயிற்சியில் அவர் இருந்துவருகிறார். இந்த பயிற்சியிலும், இவர் சினிமாவில் புது படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் (Adhik Ravichandran) இயக்கத்தில் இவர் நடிக்கவுள்ள புது திரைப்படம்தான் டேர் டெவில் (Dare Devil) . இப்படம் ஆரம்பத்தில் AK64 என அழைக்கப்பட்டுவந்தது. இந்த படத்தை ஷாலினி அஜித் குமார் (Shalini Ajith Kumar) தயாரிக்க, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.
மேலும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியானது. அந்த வகையில் இப்படத்தின் ஷூட்டிங் 2026ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தொடங்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவில் உள்ள முக்கிய நடிகர்கள் இதில் இணைவதாக வட்டாரங்கள் கூறுகிறது.




இதையும் படிங்க: முத்துவேல் பாண்டியனின் வேட்டை ஆரம்பம்…. 3 ஆண்டுகளை நிறைவு செய்தது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர்..!
அஜித் குமாரின் டேர் டெவில் படத்தில் இணையும் மலையாளம் மற்றும் தெலுங்கு முன்னணி நடிகர்கள் :
அஜித் குமாரின் டேர் டெவில் படமானது பக்கா ஆக்ஷன் மற்றும் பேமிலி பொழுதுபோக்கு படமாக உருவாகிறதாம். இந்த படத்தின் ப்ரீ புரொடக்ஷன்ஸ் பணிகள் சிறப்பாக நிறைவடைந்துவிட்டதாம். இதில் அஜித் குமார் லீட் நாயகனாக நடிக்க, நடிகை யார் என இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இதையும் படிங்க: மீண்டும் இணைகிறது வந்தியத்தேவன் – குந்தவை காம்போ.. வைரலாகும் தகவல்!
அந்த வகையில் மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் இருவருமே இப்படத்தில் முக்கியமான வேடங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. இன்னும் இது குறித்து படக்குழு எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்புகளையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித் குமாரின் இணையும் நடிகர்கள் குறித்து இணையத்தில் வைரலாகும் எக்ஸ் பதிவு:
#AjithKumar’s next, #Daredevil, is being planned as a massive Pan-India film on a grand scale. The project was recently announced, with #AdhikRavichandran on board as the director.
Malayalam superstar #Mohanlal and Telugu star #Venkatesh are reportedly set to play key roles in… pic.twitter.com/TMxCALZGJs
— Movie Tamil (@_MovieTamil) August 10, 2026
அஜித் குமார் தற்போது கார் ரேஸ் பயிற்சியில் பிசியாக இருக்கிறாராம். இந்த டேர் டெவில் படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக பணியாற்றவுள்ள நிலையில், இப்படத்தின் பணிகளை அவர் தொடங்கிவிட்டாராம். இப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியத்திலே அதிக பொருட்செலவில் உருவாகுவதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தின் ஷூட்டிங் தொடக்கம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.