மீண்டும் இணைகிறது வந்தியத்தேவன் – குந்தவை காம்போ.. வைரலாகும் தகவல்!
Karthi & Trisha Reunite : நடிகர் கார்த்தி தொடர்ந்து சினிமாவில் புது புது படங்களில் நடித்துவருகிறார். இவர் இயக்குநர் மோகன் ராஜாவின் இயக்கத்தில் தனது 31வது படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக இணையும் நடிகை குறித்து விவரமாக பார்க்கலாம்.
தமிழ் மற்றும் தெலுங்கு என தென்னிந்திய சினிமா வட்டாரங்களில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராக இருந்துவருபவர் கார்த்தி (Karthi). இவரின் நடிப்பில் இறுதியாக சினிமாவில் வெளியான திரைப்படம் வா வாத்தியார் (Vaa Vaathiyaar). கடந்த 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இப்படம் வெளியானது. இயக்குநர் நலன் குமாரசாமியின் (Nalan Kumarasamy) இயக்கத்தில் உருவான இப்படம், வசூல் மற்றும் விமர்சனங்கள் ரீதியாக பெரும் சரிவை சந்தித்திருந்தது. இந்த படத்திற்கு பின் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் மார்ஷல் (Marshal) என்ற படத்தில் கார்த்தி இணைந்து நடித்துவந்தார். இதில் அவருக்கு ஜோடியாக மலையாள சினிமாவின் வசூல் குயின் கல்யாணி பிரியதர்ஷன் இனைந்து நடித்துள்ளார்.
இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், தெலுங்கு இயக்குநர் கல்யாண் சங்கர் இயக்கத்திலும், இயக்குநர் மோகன் ராஜாவின் (Director Mohan Raja) இயக்கத்திலும் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இதில் மோகன் ராஜாவுடன் இணையும் 31வது படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) இணைகிறாராம்.




இதையும் படிங்க: தள்ளிபோகிறதா அரசன் படத்தின் ஷூட்டிங்? வைரலாகும் தகவல்
மீண்டும் இணையும் வந்தியத்தேவன் மற்றும் குந்தவை காம்போ:
ஏற்கனவே திரிஷா மற்றும் கார்த்தி இருவரும் பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 படங்களில் ஜோடியாக இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தில் இவர்களின் காம்போ சிறப்பாக இருந்த நிலையில், ரசிகர்களால் ரசிக்கப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து மீண்டும் இந்த ஜோடி இணைகிறதாம். இயக்குநர் மோகன் ராஜா பல ஆண்டுகளுக்கு பின் தமிழில் புது படம் ஒன்றை இயக்குகிறார். இதில் கார்த்தி நாயகனாக நடிக்க, பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இதையும் படிங்க: ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே… 9 ஆண்டுகளை நிறைவு செய்தது தளபதி விஜயின் மெர்சல் படம்
இதில் கார்த்திக்கு ஜோடியாக திரிஷா இணைந்து நடிப்பதாக கூறப்படுகிறது. ஆரம்பத்த்தில் நயன்தாரா இணைவதாக கூறப்பட்ட நிலையில், அவருக்கு தேதிகள் பிரச்சனையின் காரணமாக திரிஷா இணைகிறாராம். மேலும் இப்படத்தின் இசையமைப்பாளராக ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கும் நிலையில், தனி ஒருவன் படத்தை போல ஒரு வெற்றி படமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கார்த்தி மற்றும் திரிஷா இணையும் புதிய திரைப்படம் குறித்த இணையத்தில் வைரலாகும் எக்ஸ் பதிவு:
– #Karthi & #MohanRaja film is reportedly set to have #Trisha as the female lead.
– Music will be composed by #HipHopAadhi, who previously collaborated with MohanRaja for #ThaniOruvan, one of his career best albums.– The film is said to be a proper family entertainer, with… pic.twitter.com/T2koc2Qzy3
— Movie Tamil (@_MovieTamil) August 10, 2026
நடிகர் கார்த்தி தற்போது தெலுங்கு இயக்குநர் கல்யாண் சங்கர் இயக்கத்தில் தனது 30வது படத்தில் நடித்துவருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சௌத்ரி நடித்துவருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இதற்கு பின் மோகன் ராஜாவின் இயக்கத்தில் கார்த்தி இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.