AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஓடும் ரயிலில் கல்வீச்சு.. இளைஞர்களின் முகத்தில் சிதறிய கண்ணாடி சில்லுகள்.. அதிர்ச்சி வீடியோ வைரல்!

Nagpur-Mumbai Train Stone Throwing : மகாராஷ்டிரா மாநிலத்தில் விரைவு ரயில் மீது மர்ம நபர்கள் கல் வீசியதில், ஏசி வகுப்பின் ஜன்னல் கண்ணாடியை உடைத்துக் கொண்டு கண்ணாடி துகள்கள் பயணிகள் மீது விழுந்த அதிர்ச்சி காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஓடும் ரயிலில் கல்வீச்சு.. இளைஞர்களின் முகத்தில் சிதறிய கண்ணாடி சில்லுகள்.. அதிர்ச்சி வீடியோ வைரல்!
கல் வீச்சில் பாதிக்கப்பட்ட பயணிகள்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 26 Sep 2026 21:04 PM IST

மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் இருந்து நாக்பூர் மும்பை சி. எஸ். எம். டி. துறந்தோ விரிவு ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலில், ஏராளமான பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, ஏசி வகுப்பில் இளைஞர்கள் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, போர்கேடி ரயில் நிலையத்தை ரயில் கடந்து சென்ற போது, ரயில் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதில், ஒரு கல் ஏசி வகுப்பில் உள்ள கண்ணாடியே உடைத்து கொண்டு உள்ளே அமர்ந்திருந்த இளைஞர்கள் மீது கண்ணாடி துகள்கள் விழுந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனை, எதேச்சையாக செல்போனில் வீடியோ எடுத்த நிலையில் அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதில், அதிர்ஷ்டவசமாக எந்த பயணிகளுக்கும் காயம் ஏற்படவில்லை.

போர்கேடி பகுதியில் ரயில்வே போலீசார் விசாரணை

இது தொடர்பாக மத்திய ரயில்வேயில் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஸ்வப்னில் நிலா கூறுகையில், ரயில் மீது கல்வி சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்ததை தொடர்ந்து ரயில்வே போலீசார் போர்கேடி சிந்தி பிரிவு பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் பிராமணி கிராமங்களின் அருகே உள்ள பகுதிகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, சந்தேகத்துக்கு இடமான நபரோ அல்லது உறுதியான ஆதாரமா எதுவும் கண்டறியப்படவில்லை என்று தெரிவித்தார். இந்த சமூகம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: சபரிமலை ஐயப்பன் கோயிலில் 55 பவுன் தங்க கிரீடம் மாயம்.. என்ன தான் நடந்தது.. போலீசாரின் முதல் கட்ட விசாரணை கூறுவதென்ன!

153 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு

செப்டம்பர் 26 ஆம் தேதி ரயில்வே சட்ட பிரிவு 153 கீழ் அடையாளம் தெரியாத நபர் மீது 325/2026 என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 1989- ஆம் ஆண்டு ரயில்வே சட்டத்தின் 153 மற்றும் 154 பிரிவுகளின் கீழ் ரயில் மீது கல் எரிவது ஒரு குற்ற செயல் ஆகும். கடந்த ஜனவரி மாதம் தேசிய போக்குவரத்து நிறுவனம் 2025- ஆம் ஆண்டு ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்திய ரயில்வே நெட்வொர்க் முழுவதும் ரயில்கள் மீது கல் எறிந்ததாக 1698 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 665 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல் வீச்சு சம்பவத்தில் கைதானவர்கள் மீது கடும் நடவடிக்கை

இதுபோன்ற சம்பவங்களை தடுப்பதற்கும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் ரயில்வே சொத்துகளுக்கு சேதம் ஏற்படாமல் பாதுகாப்பதற்கும் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது போன்ற சம்பவங்களில் கைதாகவும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: எஸ்ஐஆர் முடிவுகள் ஒருமனதாக எடுக்கப்பட்டது… – ஞானேஷ் குமார் தொடர்பான சர்ச்சைக்கு தேர்தல் ஆணையம் விளக்கம்

Follow Us