AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

விநாயகர் சதுர்த்தி.. ஐதராபாத்தில் சுமார் ரூ.1.01 கோடிக்கு ஏலம் போன ஒற்றை லட்டு !

Hyderabad Ganesh Chathurthi Laddoo Auction | இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது. இந்த நிலையில், ஐதராபாத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பிள்ளையாருக்கு படைத்த லட்டு ஒன்று ரூ.1.01 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி.. ஐதராபாத்தில் சுமார் ரூ.1.01 கோடிக்கு ஏலம் போன ஒற்றை லட்டு !
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 26 Sep 2026 08:47 AM IST

ஐதராபாத், செப்டம்பர் 26 : விநாயகர் சதுர்த்திக்கு, ஐதராபாத்தில் (Hyderabad) பூஜைக்காக வைக்கப்பட்ட லட்டு ஒன்று சுமார் ரூ.1.01 கோடிக்கு ஏலத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி இந்தியா முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில், ஒவ்வொரு இடங்களிலும் மிகவும் வித்தியாசமான முறையிலும், பிரம்மாண்டமான முறையிலும் நடைபெற்று வந்த நிலையில், ஒற்றை லட்டு ரூ.1.01 கோடிக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஒரு லட்டு ரூ.1.01 லோடிக்கு ஏலம் எடுக்கப்பட காரணம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரூ.1.01 கோடிக்கு ஏலம் போன ஒற்றை லட்டு

தெலங்கானா மாநிலம், ஐதராபாத், பந்தல்குடா ஜாகீர் பகுதியில் கீர்த்தி ரிச்மண்ட் வில்லாஸ் குடியிருப்பு வளாகத்தில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பிரம்மாண்ட விநாயகர் சிலை ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த நிலையில் தான், அந்த விநாயகர் சிலைக்கு நைவேத்தியமாக சுமார் 5 கிலோ எடை கொண்ட லட்டு படைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சமையல் எண்ணெய் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை: இறக்குமதி வரி குறைப்பு.. முழு விவரம்

விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாட்டங்கள் ஓய்ந்துள்ள நிலையில், இந்த லட்டு ஏலம் விடப்பட்டுள்ளது. அப்போது, அந்த குடியிருப்பு வாசிகள் போட்டி போட்டுக்கொண்டு ஏலத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில் தான், சக்திமான் குழு என்ற குடியிருப்பாளர்கள் சுமாட் ரூ.1.01 கோடிக்கு அந்த லட்டை ஏலத்திற்கு எடுத்துள்ளனர்.

கடந்த ஆண்டு ரூ.2.32 கோடிக்கு ஏலம் போன லட்டு

இந்த பகுதிக்கு இத்தகைய பெரிய ஏலம் ஒன்று பெரியதல்ல. காரணம், 2025 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு இந்த பகுதியில் 10 கிலோ அளவிலான லட்டு விநாயகருக்கு படைக்கப்பட்டது. அந்த லட்டு இதனை விட இரண்டு மடங்கு அதிகமாக விற்பனை செய்யப்பட்டது. அதாவது, சுமார் ரூ.2.32 கோடிக்கு அந்த ஒற்றை லட்டு விற்பனை செய்யப்பட்டது.

இதையும் படிங்க : பயண நேரம் குறைகிறது.. இந்தியாவின் உள்கட்டமைப்பு எப்படி உங்கள் நேரத்தை சேமிக்கிறது?

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு லட்டின் மதிப்பு சற்று குறைவாக இருந்தாலும், பொதுமக்கள் மத்தியில் இந்த ஒற்றை லட்டின் ஏலம் பேசுபொருளாக மாறியுள்ளது.

Follow Us