தலைமை தேர்தல் அதிகாரி பதவி விலக வேண்டும்… இல்லையெனில் மீண்டும் போராட்டம் – அபிஜித் டிப்கே தகவல்
CJP Founder Demands CEC Resignation : தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றகோரிக்கைகள் வலுக்கத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில் சிஜேபி கட்சியின் நிறுவனர் அபிஜித் டிப்கே தலைமை தேர்தல் அதிகாரி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றகோரிக்கைகள் வலுக்கத் தொடங்கியுள்ளன. முன்னதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது பதிவில், தனி ஆவர்த்தனம் செய்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இனியும் பதவியில் நீடிக்க கூடாது. உடனடியாக அவர் நீக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
தலைமை தேர்தல் அதிகாரி பதவி விலக சிஜேபி கட்சி வலியுறுத்தல்
இந்த நிலையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியும் தேர்தல் ஆணையருக்கு எதிரான களத்தில் இறங்கியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் நிறுவனர் அபிஜித் டிப்கே, தலைமைத் தேர்தல் ஆணையர் 48 மணி நேரத்திற்குள் பதவி விலகாவிட்டால், நாடு மீண்டும் ஒரு போராட்டத்தை சந்திக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், தேர்தல் ஆணையம் குறித்து செப்டம்பர் 23, 2026 நேற்று வெளியான அறிக்கை, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நாட்டின் மிகப்பெரிய துரோகி என்பதை நிரூபிக்கிறது. அவரே நாட்டின் மிகப்பெரிய தேச விரோதி. அவர் உடனடியாகத் தனது பதவியிலிருந்து விலக வேண்டும் என்று தெரிவித்தார்.




இதையும் படிக்க : சூறாவளி காற்று.. ஆந்திரா அருகே கரையை கடந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. எத்தனை மாவட்டங்களில் மழை இருக்கும்?
மேலும் அவர், ஞானேஷ் குமார் தலைமைத் தேர்தல் ஆணையரானதிலிருந்து, யார் வாக்களிக்கலாம், யார் வாக்களிக்கக்கூடாது என்பதை அரசே தீர்மானிக்கிறது. இதுதான் ஜனநாயகமா? மொத்தம் 13 கோடிக்கும் அதிகமான வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன. இது சிறிய எண்ணிக்கை அல்ல. இவ்வளவு அதிகமான வாக்குகளை நீக்க வேண்டிய அவசியம் என்ன? என்று கேள்வி எழப்பினார்.
மேலும், பாஜகவை தீவிரமாக எதிர்த்த மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, பினராயி விஜயன் என எதிர்க்கட்சி முதலமைச்சர்கள் அடுத்தடுத்து தோற்றது தற்செயலாக இருக்க முடியாது. கடந்த 2024 மக்களவைத் தேர்தலில், எதிர்க்கட்சிக்கும் ஆளும் கட்சிக்கும் இடையிலான வெற்றி-தோல்விக்கான வாக்கு வித்தியாசம் வெறும் 2 சதவீதமாகவே இருந்தது. 13 கோடி வாக்குகளை நீக்குவது என்பது மொத்த வாக்குகளில் சுமார் 13 முதல் 14 சதவீதத்தை நீக்குவதற்குச் சமம் என்றார்.
மேலும், தாங்கள் ஒருபோதும் அதிகாரத்தை இழக்கக்கூடாது என்பதற்காக, அந்த 2 சதவீத இடைவெளியை மேலும் அதிகரிக்க ஞானேஷ் குமார் வேண்டுமென்றே இதைச் செய்கிறாரா? என்றும் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிக்க : வலி நிவாரணிகள், ஆன்டிபயாடிக் மருந்துகளை தன்னிச்சையாக பயன்படுத்த வேண்டாம்: CDSCO எச்சரிக்கை
இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் பதிவில், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் வெளியாகியுள்ள செய்தி, SIR-க்குப் பின்பு நடந்த அனைத்துச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளையும் கேள்விக்குள்ளாக்கி உள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்ற தேர்தல் ஆணையர்கள் இருவரின் ஒப்புதல் இல்லாமல் தன்னந்தனியாக, இரகசியமாகச் செயல்பட்டு வந்துள்ளது அம்பலம் ஆகியுள்ளது.
ஏற்கெனவே, கடந்த மார்ச் மாதத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அவர்களைப் பதவி நீக்கம் செய்ய திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் கொடுத்தோம். இனியும் அவர் அந்தப் பதவியில் நீடிக்க கூடாது என்று தெரிவித்துள்ளார்.