சென்னையில் வீடுபுகுந்து மாணவிக்கு காதல் தொல்லை.. மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி.. அண்ணன்- தம்பி கைது!
Chennai Student Attempt Self Harm : சென்னையில் தன்னை மீண்டும் காலிக்குமாறு வற்புறுத்தியதால் மன உளைச்சல் அடைந்த கல்லூரி மாணவி வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். இந்த சம்பவத்தில் அண்ணன், தம்பியை மகளிர் போலீசார் கைது செய்தனர்.
சென்னை மாவட்டம், பூந்தமல்லி பகுதியில் வசித்து வருபவர் ரோகித் ( 19 வயது). இவர், அந்த பகுதியில் செயல்பட்டு வரும் கல்லூரியில் கல்வி பயின்று வருகிறார். இவர், கடந்த 2 ஆண்டுகளாக அதே பகுதியில் வசித்து வரும் 17 வயது கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. அந்த மாணவியும், ரோகித்தை காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக மாணவர் ரோகித்தின் நடவடிக்கை சரியில்லாமல் இருந்துள்ளது. இதன் காரணமாக அவருடன் பேசுவதை அந்த மாணவி தவிர்த்து வந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த ரோகித் தன்னிடம் தொடர்ந்து எப்போதும் போல பேச வேண்டும் என்று அந்த மாணவியிடம் வற்புறுத்தி உள்ளார். அதற்கு, அந்த மாணவி மறுப்பு தெரிவித்ததுடன், காதலை கைவிடும் படி கூறியதாக தெரிகிறது.
மாணவியின் வீட்டில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சகோதரர்கள்
இதனால், மேலும் ஆத்திரம் அடைந்த மாணவர் ரோகித், இது தொடர்பாக தனது அண்ணன் விக்னேஷிடம் ( 20 வயது) தெரிவித்துள்ளார். உடனே, அண்ணன் தம்பி இருவரும் அந்த மாணவியின் வீட்டுக்கு நேரில் சென்று தன்னை மீண்டும் காதலிக்கு மாறும், பேசுமாறும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில், அந்த மாணவியின் பெற்றோருக்கும், அண்ணன் தம்பிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த அக்கம், பக்கத்தில் இருப்பவர்கள் இருவரிடமும் சமரசம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
மேலும் படிக்க: மின்வெட்டுக்கு புதிய தியரி.. விஞ்ஞானிகளையே விஞ்சிய தவெக அமைச்சர்கள்.. டி.டி.வி. தினகரன் மரண கலாய்!




வீட்டில் மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி
இந்த நிலையில் இந்த சம்பவத்தால் அந்த மாணவி கடும் மன உளைச்சல் அடைந்ததாக தெரிகிறது. அத்துடன், அவரை பெற்றோரும் கண்டித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடும் அதிருப்தியில் இருந்து வந்த கல்லூரி மாணவி திடீரென வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று அங்கிருந்து, கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில், கீழே விழுந்த மாணவிக்கு தலை, முகம், கை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.
அண்ணன்- தம்பியை கைது செய்த மகளிர் போலீசார்
இந்த சம்பவத்தை அறிந்த மாணவியின் பெற்றோர் மற்றும் அண்டை வீட்டார்கள் விரைந்து வந்து மனைவியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, மாணவி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மாணவியின் பெற்றோர் பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து போக்சோ, தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ரோஹித், விக்னேஷ் ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் படிக்க: “ஜெம் வீரமணியால் எனது உயிருக்கு ஆபத்து” பகீர் கிளப்பிய உதவியாளர் சாந்தி.. வீடியோ வாக்குமூலம் வைரல்!