AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மின்வெட்டுக்கு புதிய தியரி.. விஞ்ஞானிகளையே விஞ்சிய தவெக அமைச்சர்கள்.. டி.டி.வி. தினகரன் மரண கலாய்!

TTV Dhinakaran Criticizes TVK Ministers : தமிழகத்தில் நிலவும் அறிவிக்கப்படாத மின் தடை விவகாரத்தில் அறிவியல் விஞ்ஞானிகளே வியக்கும் அளவுக்கு தவெக அமைச்சர்களின் செயல்பாடுகள் இருப்பதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார் .

மின்வெட்டுக்கு புதிய தியரி.. விஞ்ஞானிகளையே விஞ்சிய தவெக அமைச்சர்கள்.. டி.டி.வி. தினகரன் மரண கலாய்!
டிடிவி. தினகரன்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 23 Sep 2026 21:00 PM IST

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டுகள் ஏற்பட்டு வருகிறது. இதற்கு, சம்பந்தப்பட்ட பகுதி மக்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அரசியல் கட்சியினரும், ஆளும் தவெக அரசையும், முதல்வர் ஜோசப் விஜய்யையும் விமர்சித்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அந்த வகையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் ஜோசப் விஜய் ரீல்ஸ் மற்றும் வீடியோவுக்காகவே மக்களை பார்த்து கை அசைத்து வருகிறார். ஆனால், மின்வாரிய அலுவலகத்தின் அருகே போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஊழியர்களை சந்திக்காமல் சென்றது ஏன் என்று தெரியவில்லை.

மின்வாரிய ஊழியர்களின் குரல் முதல்வருக்கு கேட்கவில்லையா

தமிழகத்தை இருளில் மூழ்கடித்துள்ள அறிவிக்கப்படாத மின்தடை காரணமாக மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் ஆய்வு மேற்கொண்ட நிலையில், அதே மின்வாரிய தலைமை அலுவலகத்தின் அருகே காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தியும், டிஎன்பிஎஸ்சி மூலமாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்குமாறு போராடிக் கொண்டிருக்கும் ஊழியர்கள் குரல் அவருக்கு கேட்கவில்லையா.

மேலும் படிக்க: தாராபுரத்தில் விஜய்யின் மாஸ்.. பாஸ் ஆகாது.. தொகுதி மக்கள் கொத்து பரோட்டா போடுவது உறுதி.. ஆர்.பி. உதயகுமார் அட்டாக்!

மனம் போன போக்கில் செயல்படும் முதல்வர்

தமிழகத்தில் விலைவாசி உயர்வு, மின் தடை மற்றும் சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்கு உள்ளாக்கக்கூடிய அடிப்படை பிரச்சினைகளுக்கு முதல்வர் கவனம் செலுத்தாமல், நின்றால் ரீல்ஸ், நடந்தால் ரிலீஸ் என ரிலையன்ஸ் வீடியோக்களுக்காக மட்டுமே முதல்வர் விஜய் தனது மனம் போன போக்கில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். வெறும் சம்பிரதாயத்திற்கு மட்டுமே முதல்வர் விஜய் ஆட்சி நடத்தி வருவதாக அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காற்று நின்று விட்டது. தண்ணீர் வற்றிவிட்டது.

அறிவியல் விஞ்ஞானிகளே வியக்கும் அளவுக்கு தவெக அமைச்சர்கள்

சோலார் மின்சாரத்தை சேமிக்க இடத்தை தேர்வு செய்து வருகிறோம் என அறிவியல் விஞ்ஞானிகளே வியக்கும் அளவுக்கு மின்சார துறை அமைச்சரும், சக அமைச்சர்களும் ஆளுக்கொரு கருத்தை தெரிவித்து வருகின்றனர். பணியாளர்கள் பற்றாக்குறை, பணிகள் நடைபெறாதது தான் மின்வெட்டுக்கான காரணம் என்று புது கதையை மின்சார துறை அமைச்சர் சி. டி. ஆர். நிர்மல் குமார் வடிவமைத்துள்ளார். மின்சார துறை பொறுப்பு வகிக்கும் அவர், அந்த துறையை தவிர்த்து மற்ற அனைத்து துறைகளிலும் மூக்கை நுழைப்பதையும், அரைகுறை அறிவோடு எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல சர்ச்சை கருத்துக்களை தெரிவிப்பதையும் வாடிக்கையாக வைத்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: தவெக அமைச்சர்கள் வங்கி கணக்கை ரகசியமாக கண்காணிக்கும் முதல்வர் விஜய்.. என்ன காரணம்.. என். ஆனந்த் விளக்கம்!

Follow Us