AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தாராபுரத்தில் விஜய்யின் மாஸ்.. பாஸ் ஆகாது.. தொகுதி மக்கள் கொத்து பரோட்டா போடுவது உறுதி.. ஆர்.பி. உதயகுமார் அட்டாக்!

R. B. Udhayakumar Criticizes CM Vijay : தாராபுரம் இடைத்தேர்தலில் முதல் அமைச்சர் ஜோசப் விஜய்யின் மாஸ்.. பாஸ் ஆகாது என்றும், தேர்தலில் அவரை தொகுதி மக்கள் கொத்து பரோட்டோ போடுவார்கள் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தாராபுரத்தில் விஜய்யின் மாஸ்.. பாஸ் ஆகாது.. தொகுதி மக்கள் கொத்து பரோட்டா போடுவது உறுதி.. ஆர்.பி. உதயகுமார் அட்டாக்!
ஆர்.பி.உதயகுமார்- முதல்வர் விஜய்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 23 Sep 2026 15:44 PM IST

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதியில், அதிமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பானுமதிக்கு ஆதரவாக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தளவாய் பட்டினம் பகுதியில் இன்று புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியின்போது தாராபுரம் பகுதியில் நீர் மேலாண்மை திட்டங்கள், குடிநீர் திட்டங்கள், உயர்தர சாலை வசதிகள் நிறைவேற்றப்பட்டிருந்தன. வேட்பாளர் பானுமதி கருணாகரன் மாவட்ட கவுன்சிலர் ஆக இருந்து தொகுதி மக்களுக்கு பல்வேறு நன்மைகளை செய்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி பொறுப்பேற்ற 4 மாதங்களில் ரூ. 40 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளது. எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.

தாராபுரத்தில் விஜய்யின் மாஸ்… பாஸ் ஆகாது

தமிழகத்தில் தற்போதும் மின்வெட்டு, விவசாயிகள் தட்கல் முறையில் பணம் செலுத்தியும் இலவச மின்சாரம் வழங்கப்படவில்லை. பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவு திட்ட விரிவாக்கத்தில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன. மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தியின் காரணமாகவே தமிழக வெற்றிக் கழக வேட்பாளரால் போலீசார் பாதுகாப்பு இன்றி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள முடியவில்லை. இதனால், முதல்வர் விஜயின் மாஸ்.. தாராபுரத்தில் பாஸ் ஆகாது.. ஃபெயிலியர் தான் ஆகும்.

மேலும் படிக்க: “உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்”.. கோவை விமான நிலையத்தில் சிங்கப்பூர் பயணிகளிடம் அதிரடிப் பறிமுதல்!

தாராபுரத்தில் விஜய்யை கொத்து பரோட்டா போடுவது உறுதி

இதனை தாராபுரம் தொகுதி மக்கள் உணர்த்தி உள்ளனர். கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் கொத்து பரோட்டா போட்டதாக கூறும் முதல்வர் விஜய், தாராபுரம் தொகுதியில் எதற்காக 2 நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். அவர் 2 நாட்கள் அல்ல 20 நாள்கள் பிரச்சாரம் மேற்கொண்டாலும் தாராபுரம் மக்கள் அவரை கொத்து பரோட்டா போடுவது உறுதி ஆகி உள்ளது. அக்டோபர் 2- ஆம் தேதி தாராபுரம் அருகே உள்ள தளவாய்பட்டினம் பகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேட்பாளரை ஆதரித்து மக்கள் மத்தியில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

செங்கோட்டையன் மீண்டும் எடப்பாடியிடம் வந்து நிற்பார்

அதிமுகவில் இருந்து மேலும் பல்வேறு எம்எல்ஏக்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு செல்வார்கள் என்று செங்கோட்டையன் தெரிவித்து வருவது அவர் பகல் கனவு காண்பது போல உள்ளது. 54 ஆண்டு கால பாரம்பரியத்துடன், 31 ஆண்டுகள் ஆட்சி செய்த மாபெரும் அதிமுக என்ற இயக்கத்தை எந்த ஓடு காலியாலும் அழித்துவிட முடியாது. பதவிக்கும், அதிகாரத்துக்கும் அதிமுக தொண்டர்கள் இரையாக மாட்டார்கள். செங்கோட்டையன் மீண்டும் எடப்பாடியாரிடம் வந்து நிற்கும் காலம் விரைவில் வரும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: வீரமணியின் வீடு, அலுவலகங்களில் போலீஸ் சோதனை – திடுக்கிடும் தகவல்கள்

Follow Us