AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வீரமணியின் வீடு, அலுவலகங்களில் போலீஸ் சோதனை – திடுக்கிடும் தகவல்கள்

Veeramani’s House Raided : சிறுமிகள் மீதான வன்கொடுமை வழக்கில் ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் போலீஸார் சோதனை நடத்தினர். வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்களை சேகரிக்கும் வகையில் இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

வீரமணியின் வீடு, அலுவலகங்களில் போலீஸ் சோதனை – திடுக்கிடும் தகவல்கள்
வீரமணி
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 23 Sep 2026 14:59 PM IST

சென்னை, செப்டம்பர் 23 : சிறுமிகள் மீதான வன்கொடுமை வழக்கில் ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் போலீஸார் சோதனை நடத்தினர். வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் மற்றும் பிற ஆதாரங்களை சேகரிக்கும் வகையில் இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. மேலும், வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

வீரமணியின் வீடு, அலுவலகங்களில் போலீஸ் சோதனை

இந்த வழக்கில் இருந்து தப்பிக்க ரூ.70 கோடி வரை செட்டில்மென்ட் செய்யப்பட்டதாக வெளியானது. இந்த நிலையில் இதற்கான ஆதாரங்களை திரட்ட காவல்துறையினர் தற்போது சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை ராயப்பேட்டையில் தொழில் அதிபர் ஜெம் வீரமணிக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது.

Follow Us