சென்னையில் மூதாட்டிக்கு தொல்லை – தவெக நிர்வாகி கைது
Chennai TVK Functionary Arrested : சென்னை அசோக் நகரில் பிளாட்பாரத்தில் தங்கியிருந்த 65 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை அளித்த தவெக நிர்வாகி ஆனந்த் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் மீது துன்புறுத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அசோக் நகர் போலீசார் கைது செய்தனர்.
சென்னை, செப்டம்பர் 23 : சென்னை அசோக் நகரில் பிளாட்பாரத்தில் தங்கியிருந்த 65 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை அளித்த தவெக நிர்வாகி ஆனந்த் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் மீது துன்புறுத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அசோக் நகர் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது ஆனந்த்திடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் மூதாட்டிக்கு தொல்லை தந்த வழக்கில் தவெக நிர்வாகி கைது
முன்னதாக பெரம்பலூர் அருகே மதுபோதையில் இருந்த தவெகவினர் அரசு பேருந்துக்கு வழிவிடாமல் பிரச்னை செய்த நிலையில், தட்டிக்கேட்ட பேருந்தின் ஒட்டுநர் மற்றும் நடத்துநரையும் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக 3 தவெக நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே கிளியூர் முதல் பெருமத்தூர் வரை இயக்கப்படும் அரசு நகரப் பேருந்து, நேற்று 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.
இதையும் படிக்க : அரசு மணல் குவாரி குத்தகைதாரர் வீட்டில் லட்சக்கணக்கில் நகை-பணம் கொள்ளை.. சிறிது சிறிதாக திருடிய தாய்-மகள் அதிரடி கைது.. வேலூரில் துணிகரம்!




இந்த நிலையில் மங்களமேடு அருகே சென்றபோது, இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் பேருந்துக்கு வழிவிடாமல் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து பேருந்து ஓட்டுநர் மோகன், ஹாரன் எழுப்பி இருசக்கர வாகனத்தை முந்திச் சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த 3 பேரும், பேருந்தை சுமார் 2 கிலோமீட்டர் தூரம் பின்தொடர்ந்து தேவையூர் பகுதியில் வழிமறித்ததாக கூறப்படுகிறது.
பேருந்தை நிறுத்திய பின்னர் ஓட்டுநர் மோகனிடம் அவர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 3 பேரும் மதுபோதையில் இருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஓட்டுநர் மோகனை அவர்கள் தாக்கியதாகவும், இதை தடுக்க முயன்ற நடத்துநர் பெரியசாமியையும் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க : தவெக அரசுக்கு சொல் புத்தியும் இல்லை… சுய புத்தியும் இல்லை… எடப்பாடி பழனிசாமி கடுமையாக விளாசல்!
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தாக்குதலில் காயமடைந்த ஓட்டுநர் மோகனை பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஓட்டுநர் மோகன் அளித்த புகாரின் பேரில் மங்களமேடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் தேவையூரைச் சேர்ந்த சதீஷ், சரவணன் மற்றும் ஜெகதீஷ் என்பதும், மூவரும் தவெக தேவையூர் கிளை நிர்வாகிகள் என்பதும் தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் காரணமாக பேருந்தில் பயணித்த 50க்கும் மேற்பட்டோர் நீண்ட நேரம் சாலையிலேயே காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் மாற்றுப் பேருந்து வரவழைக்கப்பட்டு பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.