AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தவெக அரசுக்கு சொல் புத்தியும் இல்லை… சுய புத்தியும் இல்லை… எடப்பாடி பழனிசாமி கடுமையாக விளாசல்!

Edappadi K Palaniswami Criticized TVK Govt : தமிழக வெற்றிக் கழக அரசுக்கு சொல் புத்தியும் இல்லை, சுய புத்தியும் இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி விமர்சித்தார். விவசாயிகளிடம் நெல் கொள்முதல் விவகாரத்தில இந்த விமர்சனத்தை அவர் முன் வைத்தார்.

தவெக அரசுக்கு சொல் புத்தியும் இல்லை… சுய புத்தியும் இல்லை… எடப்பாடி பழனிசாமி கடுமையாக விளாசல்!
முதல்வர் விஜய்- எடப்பாடி பழனிசாமி.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 22 Sep 2026 21:11 PM IST

தமிழக வெற்றிக் கழக அரசுக்கு சொல் புத்தியும் இல்லை… சுய புத்தியும் இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கடுமையாக விமர்சித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் விளையாட்டு பிள்ளைகளால் நடத்தப்படும் தமிழக வெற்றிக்கழக கூட்டணி ஆட்சியில் விவசாயிகளுக்கு தொடர்ந்து பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதனை, சொல்லி புரிய வைக்க முடியாத நிலை உள்ளது. தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகள் பாடுபட்டு விளைவித்த நெல்மணிகளை தமிழக வெற்றிக் கழக பொய்க்கால் குதிரை அரசு முறையாக கொள்முதல் செய்வது இல்லை என்று புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. அதே வேளையில், முறையாக கொள்முதல் செய்யப்படாத நெல்மனிலை சேமிப்பு கிடங்குகளில் முறையாக பாதுகாக்காத காரணத்தால் மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

5 லட்சம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்

இவற்றையெல்லாம் மிகுந்த அக்கறையோடு சுட்டிக் காட்டினால், குறைகளை களைய எந்த நடவடிக்கையும் எடுக்காமல், பிரச்சனைகளை திசை திருப்பும் வகையிலேயே தவெக அரசு நடந்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் 120 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் இட பற்றாக்குறை காரணமாக திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 5 லட்சம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து கடுமையாக சேதம் அடைந்துள்ளது. இது விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க : சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்.. கூவம் ஆற்றில் பசுமை பகுதிகள்- நடைபாதை.. முதல்வரின் சூப்பர் திட்டம்!

தவெக அரசுக்கு சொல் புத்தியும் இல்லை- சுய புத்தியும் இல்லை

இது போன்று மழையில் நனைந்து சேதம் அடைந்த நெல்மணிகளை அரிசியாக்கி புழுத்துப்போன நிலையில் ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் நிலை ஏற்படும். தமிழக வெற்றிக்கழக ஆட்சியாளர்களின் அலட்சியம் காரணமாக குறித்த நேரத்தில் கொள்முதல் செய்யாமல் விவசாயிகளின் நெல் மணிகள் சேதமடைந்து வருகிறது. கொள்முதல் செய்த நெல்மணிகளும் முறையான பராமரிப்பு இல்லாமல் மழையில் நனைந்து வீணாகி வருகிறது. மொத்தத்தில் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு சொல் புத்தியும், சுய புத்தியும் இல்லாமல் ஏனோ, தானோ என்று செயல்பட்டு வருகிறது.

போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை தேவை

இது, தமிழக விவசாயிகளையும், ரேஷன் அரிசியை நம்பி இருக்கும் ஏழை மக்களையும் வாட்டி வதைக்கிறது. இத்தகைய போக்கில் இருந்து வரும் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு கடும் கண்டனங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு மட்டுமின்றி, விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மணிகள் சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் பாதுகாப்பாக இருப்பதற்கு உரிய நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் தவெக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று இதன் மூலம் வலியுறுத்துகிறேன் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: முதல்வர் விஜய்யுடன் ஏன் லண்டன் செல்லவில்லை? அமைச்சர் கீர்த்தனா ஆதாரத்துடன் விளக்கம்.. என்ன அது!

Follow Us