முதல்வர் விஜய்யுடன் ஏன் லண்டன் செல்லவில்லை? அமைச்சர் கீர்த்தனா ஆதாரத்துடன் விளக்கம்.. என்ன அது!
Industries Minister Keerthana : முதல் அமைச்சர் விஜய்யுடன் லண்டன் பயணம் மேற்கொள்ளாதது குறித்து தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா ஆதாரத்துடன் விளக்கம் அளித்துள்ளார். அவர் அளித்த விளக்கம் என்ன என்பதை இந்தப் பதிவில் விரிவாக பார்த்து தெரிந்து கொள்ளலாம் .
தமிழகத்துக்கான முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைப்பதற்காகவும் முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் லண்டன் சென்றிருந்தார். சுமார் ஒரு வார காலம் முதலீடுகளை ஈர்ப்பதற்கான சுற்றுப்பயணம் மேற்கொண்டு விட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகம் திரும்பினார். இந்த நிலையில், தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா எதற்காக முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வருடன் செல்லவில்லை என்றும், தொழில்துறை அமைச்சர் இல்லாமல் முதல்வர் தனியாக முதலீடு ஈர்க்க சென்றாரா என்றும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் கேள்விகளை எழுப்பியிருந்தனர். இதற்கு, தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா ஆதாரத்துடன் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பான ஆதாரத்தையும் அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதில். முதல் அமைச்சர் ஜோசப் விஜய் லண்டன் பயணம் மேற்கொண்ட போது. தனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருந்தது.
காமாட்சி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை
இதன் காரணமாக சென்னை, பள்ளிக்கரணையில் உள்ள காமாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இருந்தேன். இது தொடர்பான மருத்துவ சான்றிதழ்கள் வெளியிடப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்துள்ளார். முன்னதாக, முதல் அமைச்சர் ஜோசப் விஜய் லண்டன் சென்றபோது, அவருடன் பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, முதல்வரின் தனி பாதுகாவலர்கள், முதல்வர் விஜயின் ஜோதிட ஆலோசகர் ரிக்கி ரத்தன் பண்டிட் ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.
மேலும் படிக்க: சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்.. கூவம் ஆற்றில் பசுமை பகுதிகள்- நடைபாதை.. முதல்வரின் சூப்பர் திட்டம்!




அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அளித்த விளக்கம்
இந்த பயணத்தின் போது, தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அந்த துறையின் அமைச்சர் கீர்த்தனா எதற்காக உடன் செல்லவில்லை. தொழில்துறை அமைச்சர் இல்லாமலேயே தொழில் முதலீடுகள் ஈர்ப்பு என எதிர்க்கட்சிகள் விமர்சித்து இருந்தன. அப்போது, இந்த விமர்சனங்களுக்கு பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அளித்த விளக்கத்தில், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவுக்கு உடல்நலம் சரியில்லாமல் உள்ளது. இதன் காரணமாகவே, அவர் லண்டன் செல்லவில்லை. அதனாலேயே முதல்வர் விஜய்யுடன் தான் உடன் சென்றிருந்தேன் என்று தெரிவித்து இருந்தார்.
எலும்பு முறிவு அறுவை சிகிச்சை
இதனிடையே, அமைச்சர் கீர்த்தனாவுக்கு ஆதரவாக கனிமொழி எம்.எல்.ஏ விளக்கம் அளித்துள்ளார். அதில், முதல்வர் லண்டன் பயணத்தின் போது, அமைச்சர் கீர்த்தனாவுக்கு எலும்பு முறிவு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அப்போது, அவரை மருத்துவமனையில் நேரில் சந்தித்து இருந்தேன். மருத்துவர்கள் அவரை 20 நாட்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தி இருந்தனர். இதன் காரணமாகவே அவர் லண்டன் செல்லவில்லை. தமிழகத்தின் மீதான அர்ப்பணிப்பு காரணமாக 4 நாள்களிலேயே அவர் மீண்டும் பணிக்கு திரும்பியதாக தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: பசும்பொன் மக்கள் கட்சியின் தலைவர் அதிரடி கைது.. தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு.. பின்னணி என்ன!