AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யும்? – வானிலை மையம் எச்சரிக்கை

Tamil Nadu Weather Alert: வரும் நவம்பர் 13, 2026 அன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, அது அதற்கடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும் என்றும் இதன் தாக்கம் காரணமாக நவம்பர் 11, 2026 இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யும்? – வானிலை மையம் எச்சரிக்கை
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 11 Nov 2026 06:52 AM IST

சென்னை, நவம்பர் 11 : வருகிற நவம்பர் 13, 2026 அன்று வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும் இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நவம்பர் 11, 2026 இன்று 4 மாவட்டங்களுக்கு கனமழை (Heavy Rain) பெய்யும் என்றும் மேலும் 11 மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், வரும் நவம்பர் 13, 2026 அன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, அது வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும். இது மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 1.5 கிமீ உயரம் வரை ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் சுமார் 0.9 கிமீ உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : தவெக 6 மாத ஆட்சியில் 50 கொலைகள்.. விஜய் அரசுக்கான கெடு நிறைவு.. போராட்டங்களில் குதிக்கும் பாஜக.. நயினார் நாகேந்திரன்!

இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யும்?

இதன் காரணமாக நவம்பர்11, 2026 இன்று சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய 4 மாவட்டங்களில் இடிமின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கவிடுக்கப்பட்டுள்ளது. மேலும் தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

அதனைத் தொடர்ந்து நவம்பர் 11, 2026 நாளை தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதையும் படிக்க : பெரியார் அறிவுலக புத்தகக் கொள்முதல் முறைகேடு புகார்.. லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

மீனவர்களுக்கு எச்சரிக்கை

இதற்கிடையில் வங்கக்கடலில் நவம்பர் 13, 2026 குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி அது புயலாக மாறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் காசிமேடு மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது. உத்தரவை மீறும் விசைப்படகுகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை எச்சரிக்கை எடுத்துள்ளது. ஏற்கனவே ஆந்திராவின் கடல் பகுதியில் படகு கவிழந்த விபத்தில் காசிமேடு மீனவர்கள் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்துக்கு புயல் எச்சரிக்கையை மீறி அவர்கள் கடலுக்கு சென்றதே காரணம் என கடலோர காவல்படை அறிக்கை வெளியிட்டிருந்தது.

Follow Us