நீலகிரியில் மீண்டும் மலை ரயில் சேவை ரத்து.. கன மழையால் திடீர் அறிவிப்பு.. சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!
Nilgiris Mountain Rail Service : நீலகிரி மாவட்டத்தில் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மேட்டுப்பாளையம் டூ உதகமண்டலம் இடையேயான மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தரப்பில் இரு ந்து அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது .
நீலகிரி மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக மேட்டுப்பாளையம் டூ உதகை சிறப்பு ரயில் வருகிற 13- ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நீலகிரி ரயில் பாதையில், மண்சரிவு சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்ததால் மேட்டுப்பாளையம் டூ ஊட்டி மலை ரயில் சேவை இன்று செவ்வாய்க்கிழமை ( நவம்பர் 10- ஆம் தேதி வரை) ரத்து செய்யப்பட்டிருந்தது. முன்னதாக, நீலகிரி மாவட்டத்தில் அக்டோபர் 23- ஆம் தேதி நள்ளிரவில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயில் பாதையில் பல்வேறு இடங்களில் மண், பாறைகள், மரங்கள் சரிந்து விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இதனால், மலை ரயில் தண்டவாளத்தில் பெரிய அளவிலான பாறைகள், மணல் மற்றும் மரங்கள் விழுந்ததால் மேட்டுப்பாளையம் டூ ஊட்டி மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.
மீண்டும் மேட்டுப்பாளையம் டூ உதகை மலை ரயில் ரத்து
இந்த மண் சரிவை சரி செய்யும் பணிகளில் பாதையில் ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். அந்தப் பகுதியில், மீண்டும் மண்சரிவு ஏற்பட்டதால் சீரமைப்பு பணிகள் நடைபெறவில்லை. இதன் காரணமாக மேட்டுப்பாளையம் டூ ஊட்டி மலை ரயில் மற்றும் சிறப்பு ரயில் இன்று செவ்வாய்க்கிழமை வரை ரத்து செய்யப்பட்டிருந்தது. இதனால், மீண்டும் மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை தொடங்கப்படும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து வந்தனர். ஆனால், மீண்டும் மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க: Part Time முதல்வர்.. Full Time கண்டன்ட் கிரியேட்டர்.. ஜோசப் விஜய்க்கு பொறுப்பே இல்லை.. ரவுண்டு கட்டி விளாசிய மு.க.ஸ்டாலின்!




நவம்பர் 11 முதல் 13-ஆம் தேதி வரை ரயில் ரத்து
இதில், நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக மேட்டு்பாளையம் டூ உதகமண்டலம் இடையேயான மலை ரயில் நாளை புதன்கிழமை ( நவம்பர் 11- ஆம் தேதி) முதல் (நவம்பர் 13- ஆம் தேதி) வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் பலத்த மழை பெய்தது. இதில், கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டத்தில் மழை கொட்டி தீர்த்தது.
கோவை- நீலகிரியில் மண் சரிவு
இதன் காரணமாக, பல்வேறு இடங்களில் திடீர் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. கோவையில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பேருந்து ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்திருந்தார். இதேபோல, நீலகிரியில் மண்சரிவு என்பது குறிப்பிடத்தக்கது. முன்னெச்சரிக்கையாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தவெக 6 மாத ஆட்சியில் 50 கொலைகள்.. விஜய் அரசுக்கான கெடு நிறைவு.. போராட்டங்களில் குதிக்கும் பாஜக.. நயினார் நாகேந்திரன்!