AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தவெக 6 மாத ஆட்சியில் 50 கொலைகள்.. விஜய் அரசுக்கான கெடு நிறைவு.. போராட்டங்களில் குதிக்கும் பாஜக.. நயினார் நாகேந்திரன்!

Nainar Nagendran Criticizes TVK Aadministration : தமிழக வெற்றிக் கழக அரசின் ஆட்சிக்கு அளிக்கப்பட்டிருந்த 6 மாத கெடு நிறைவடைந்த நிலையில், இந்த ஆட்சியின் அலங்கோலங்கலை கண்டித்து வரும் காலங்களில் பாஜக சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும் என்று நயினார் தெரிவித்துள்ளார்.

தவெக 6 மாத ஆட்சியில் 50 கொலைகள்.. விஜய் அரசுக்கான கெடு நிறைவு.. போராட்டங்களில் குதிக்கும் பாஜக.. நயினார் நாகேந்திரன்!
முதல்வர் விஜய்- நயினார் நாகேந்திரன்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 10 Nov 2026 19:36 PM IST

தவெகவின் 6 மாத ஆட்சிக்கான கெடு முடிவடைந்ததால் ஆட்சி நிர்வாக குறைபாடுகளை கண்டித்து பாஜக சார்பில் போராட்டம் மேற்கொள்ளப்படும் என்றார் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன். இது தொடர்பாக திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தவெகவின் 6 மாத ஆட்சி குறித்து என்ன கூறுவது என்று தெரியவில்லை. தமிழக விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடி என்று அறிவித்துவிட்டு தற்போது 75000 வரை மட்டுமே தள்ளுபடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து யாரும் பேசவில்லை. கடந்த 6 மாத தவெக ஆட்சியில் 50 படுகொலைகளுக்கு மேல் நடந்துள்ளது. தீபாவளி நாளில் மட்டும் 15 கொலைகள் நிகழ்ந்துள்ளன. ஆனால், அமைச்சர் ராஜ்மோகன் கடந்த தீபாவளி பண்டிகைகளில் இது போன்ற குறைகள் நடந்துள்ளது என்றும், தற்போது குறைவாக கொலைகள் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேகதாது விவகாரத்தில் பாஜக உறுதியான நிலைப்பாடு

ஒரு அமைச்சர் இவ்வாறு பேசலாமா. முதல்வர் இது குறித்து எந்த கேள்வியும் கேட்க மாட்டாரா. ஒரு அமைச்சர் இப்படி கூறுவது எந்த வகையில் நியாயம். ஆட்சியாளர்கள் கையில் ஆட்சி அதிகாரம் இல்லை என்பதே இந்த சம்பவங்கள் காட்டுகின்றன. கர்நாடக மாநிலத்தில் மேகதாது உள்ளிட்ட எந்த அணைகளும் கட்டக்கூடாது என்பதுதான் தமிழக பாஜகவின் உறுதியான நிலைப்பாடாகும். தமிழக மக்களின் நலனே எங்களது முழுமூச்சாகும். தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு எங்கு உள்ளது என்று கேள்வி எழுப்பும் நிலை இருந்து வருகிறது. தமிழகத்தில் போலீசாருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. தேனியில் நடந்த சம்பவத்தில் பணியில் இருந்த போது நிகழ்ந்துள்ளதாக முதல்வர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க: அடிதடி,பாலியல் தொல்லை,கட்டப்பஞ்சாயத்து.. அதிகரிக்கும் தவெக எம்எல்ஏக்களின் அட்ராசிட்டி.. சாமானியர் முதல் பெண் ஐஏஎஸ் வரை பாதிப்பு.. உதயநிதி அட்டாக்!

திருச்சியில் ஒருவர் மீது துணை சபாநாயகர் தாக்குதல்

ஆனால், உயர் அதிகாரிகள் அவர் அணியவில்லை என்று கூறுகின்றனர். அப்படி எனில் அவர் சீருடை அணியவில்லை என்றால் யார் வேண்டுமானாலும் வெட்டி கொலை செய்யலாமா. இதற்கு முதல்வர் தான் விளக்கம் அளிக்க வேண்டும். தமிழக மக்களை பாதுகாக்க தான் உள்ளது. ஆனால், அவர்களுக்கே பாதுகாப்பு இல்லையெனில் மக்கள் என்ன செய்வார்கள். அமைச்சர்களுக்கு நாங்கள் எந்தத் துறையில் இருக்கிறோம் என்பது தெரிகிறதா, இல்லையா என்ற சந்தேகம் உள்ளது. திருச்சியில் மனு அளிக்க வந்த நபரை துணை சபாநாயகர் தாக்கியுள்ளார்.

தவெக ஆட்சிக்கான 6 மாத கெடு நிறைவு

பின்னர், அவரை சமாதானம் செய்து போலி வீடியோவை பதிவிட்டுள்ளார். ஒவ்வொரு எம்எல்ஏக்களும் எல்லை சாமிகளாக இருந்து மக்களை காப்பார்கள் என்று முதல்வர் கூறியிருந்தார். ஆனால், கள்ளக்குறிச்சி எல்லை சாமியான எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். அவர் மீது பல புகார்கள் இருந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, முதல்வர் பதவி விலக வேண்டும். தவெகவின் 6 மாத ஆட்சிக்கான கெடு முடிந்ததால் பாஜக போராட்டங்களில் ஈடுபடும் என்று தெரிவித்தார் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: Part Time முதல்வர்.. Full Time கண்டன்ட் கிரியேட்டர்.. ஜோசப் விஜய்க்கு பொறுப்பே இல்லை.. ரவுண்டு கட்டி விளாசிய மு.க.ஸ்டாலின்!

Follow Us