AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அடிதடி,பாலியல் தொல்லை,கட்டப்பஞ்சாயத்து.. அதிகரிக்கும் தவெக எம்எல்ஏக்களின் அட்ராசிட்டி.. சாமானியர் முதல் பெண் ஐஏஎஸ் வரை பாதிப்பு.. உதயநிதி அட்டாக்!

Udhayanidhi Latest Pressmeet : நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தமிழக வெற்றக் கழகத்தின் எம்எல்ஏக்களின் அட்ராசிட்டியால் சாமானிய மக்கள் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி வரை பாதிக்கப்பட்டு வருவதாக எதிர்க் கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

அடிதடி,பாலியல் தொல்லை,கட்டப்பஞ்சாயத்து.. அதிகரிக்கும் தவெக எம்எல்ஏக்களின் அட்ராசிட்டி.. சாமானியர் முதல் பெண் ஐஏஎஸ் வரை பாதிப்பு.. உதயநிதி அட்டாக்!
உதயநிதி ஸ்டாலின் - முதல்வர் விஜய்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 10 Nov 2026 14:37 PM IST

தமிழகத்தில் ஆளும் கட்சியின் எம்எல்ஏக்கள் அத்துமீறல் சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்கேட்டையும், தனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆட்டத்தையும் டம்மி முதல்- அமைச்சர் ஜோசப் விஜய் எப்போது கட்டுப்படுத்துவார். தமிழகத்தில் இதுவரை அளவுக்கு துப்பாக்கி கலாச்சாரத்தை இந்த சோப்ளாங்கி ஆட்சியாளர்கள் கொண்டு வந்துள்ளனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே ஞானவேல் என்பவர் துப்பாக்கியால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில், ஒரே நாளில் 9, 11, 13 நிமிடம் கொலைகளின் எண்ணிக்கை கொண்டை செல்வதை பார்த்து தமிழ்நாடே பதறிக் கொண்டு இருக்கிறது.

வெட்கங்கெட்ட தமிழக வெற்றிக் கழக அரசு

ஆனால், அதனையெல்லாம் பண்டிகை கால கொலைகள் என்று கூறுகிறது வெட்கங்கெட்ட தமிழக வெற்றிக் கழக அரசு. நுங்கம்பாக்கத்தில் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் எரியும் பொருள் என்று கூறியுள்ளது காவல்துறை. குற்ற சம்பவங்களை கவர் அப் செய்ய இவர்கள் பெயர்களை வைத்து தனியாக டிக்ஷனரியே போடலாம். தேனி மாவட்டத்தில் பொது இடத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக பட்டாசு வெடித்தவர்களை கண்டித்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த காவலர் பணியில் இருந்த போது கொலை செய்யப்பட்டார் என்று டம்மி முதல் அமைச்சரும்,

மேலும் படிக்க: “ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பினேனா?”.. தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் திட்டவட்ட மறுப்பு!!

தவெக எம்எல்ஏக்கள் அட்ராசிட்டியால் அனைவரும் பாதிப்பு

பணியில் இல்லாத போது கொலை செய்யப்பட்டார் என்று டம்மி முதல்வரின் காவல்துறையும் அறிக்கைகளை விடுத்துள்ளனர். மிரட்டல், அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, பாலியல் தொல்லை, கமிஷன் என ஆளுங்கட்சி தவெக எம். எல். ஏ. க்களின் அட்ரா சிட்டியால் சாமானியர் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது எதற்கும் வாயை திறக்காமல், பொறுப்பேற்காமல் ஸ்லீப் மோடில் இருக்கும் டம்மி முதல் அமைச்சர் ஜோசப் விஜய் உடனே விழித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.

அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கிய தவெக எம்எல்ஏக்கள்

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நாளில் பல்வேறு இடங்களில் 13 கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அத்துடன், திருச்சி மாவட்டம், துறையூர் சட்டமன்ற தவெக எம்எல்ஏவும், துணை சபாநாயகருமான ரவிசங்கரிடம் குடிநீர் தொடர்பாக அளிக்க சென்ற தொகுதி நபர் ஒருவரை ரவிசங்கர் கொடூரமான முறையில் தாக்கி இருந்தார். அத்துடன், கள்ளக்குறிச்சி ஆட்சியர் செல்போனுக்கு தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச மெசெஜ் அனுப்பி இருந்தார். இவற்றையெல்லாம் குறிப்பிட்டு உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

மேலும் படிக்க: “ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லை!”.. தவெக எம்எல்ஏ-வை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. இபிஎஸ் வலியுறுத்தல்!!

Follow Us