AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

TN 07 CM 2031- காரில் பயணித்த தொல்.திருமாவளவன்.. விடுதலை சிறுத்தைகள் கட்சி அளித்த விளக்கம்!

VCK Thirumavalavan Car : தொல். திருமாவளவன் பயணித்த TN 07 CM 2031- என்ற பதிவெண் கொண்ட கார் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி விளக்கம் அளித்துள்ளது. இதில், என்ன தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம் .

TN 07 CM 2031- காரில் பயணித்த தொல்.திருமாவளவன்.. விடுதலை சிறுத்தைகள் கட்சி அளித்த விளக்கம்!
தொல்.திருமாவளவன் பயணம் செய்த கார்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 22 Sep 2026 16:00 PM IST

சென்னையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் TN 07 CM 2031- என்ற பதிவெண் கொண்ட டெஸ்லா சொகுசு காரில் கோட் சூட் அணிந்தவாறு சென்ற வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளானது. இந்த நிகழ்வு தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் எஸ். எஸ். பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். அதில், ஒரு தனியார் நிறுவனம் சார்பில் “திருமா 35- சமூக நீதியின் சகாப்தம்” என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. பூந்தமல்லியில் செயல்பட்டு வரும் ஈ. வி. பி. பிலிம் சிட்டியில் நடந்த இந்த படப்பிடிப்பின் போது, சன்ரூப் திறக்கப்பட்ட வாகனத்தில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் வரும்போது அந்த படம் மற்றும் வீடியோக்கள் எடுக்கப்பட்டிருந்தன.

ஆளும் கட்சியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி

படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட அந்த படம் வாகன எண் குறித்து வன்மத்தை நெஞ்சில் நிறுத்தி மலிவு அரசியல் மனநிலையோடு சிலர் காழ்ப்புணர்ச்சியை கக்கி வருகின்றனர். தொல். திருமாவளவனை வைத்து படம் எடுக்கப்பட்ட அந்த விலை உயர்ந்த கார் படப்பிடிப்புகளுக்கு வாடகைக்கு விடப்படும் கார் ஆகும். தமிழகத்தில் ஆளும் கட்சியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி என்கிற எதிர்கால திசை புள்ளியை வெளிப்படுத்த படப்பிடிப்பு குழுவினர் TN 07 CM 2031- என்ற வாகன எண்ணை வடிவமைத்திருந்தனர்.

மேலும் படிக்க: ஒரு ரூபாய் பாட்டிக்கு மீண்டும் வழங்கப்பட்ட இலவச சிலிண்டர் – மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பெயரில் நடவடிக்கை

சி.எம். என்ற வார்த்தை பதித்த வாகனத்தில் திருமாவளவன்

படப்பிடிப்பில் இடம்பெறும் காட்சிகள் பயன்படுத்திய காரின் ரகம், அந்த காரின் பதிவு எண் ஆகியவை குறித்து திருமாவளவனுக்கு எதுவும் தெரியாது. நிகழ்ச்சியை நடத்தி இருந்த குழுவினரை அதனை இறுதி செய்திருந்தனர். இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள மனம் இன்றி சிலர் குழம்பி வருகின்றனர். தொல். திருமாவளவன் சி. எம். என்ற வார்த்தை பதித்த வாகனத்தில் வருவதையே தாங்கிக் கொள்ள முடியாமல் வழக்கம்போல் அவதூறு பரப்பி வருகின்றனர். இன்று தீர்மானித்தது போல நாளைய தமிழகத்தின் அரசியல் திசை வழியை தமிழக மக்கள் தீர்மானிப்பார்கள்.

காலத்தின் தீர்ப்பை விடுதலை சிறுத்தைகள் ஏற்கும்

இதை, உள்ள பூர்வமாக உள்வாங்குவது தான் தொல். திருமாவளவன். காலத்தின் தீர்ப்பை பெரும் மகிழ்ச்சியோடு வரவேற்று விடுதலை சிறுத்தைகள் காத்திருப்போமே தவிர எரிச்சலில், வெறுப்பு அரசியலில் வெந்து போக மாட்டோம். தமிழின மேம்பாட்டின் மீதும், சமூக நீதியின் மீதும் அக்கறை கொண்டுள்ள அனைவரும் இந்த கொடும் சிந்தனை உடையவர்களை கண்டிப்போம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: ஜெம் வீரமணி வழக்கை மூடி மறைக்க முயற்சி… பல கோடி கை மாறியிருக்கிறது… அமைச்சர் ராஜ்மோகன் பரபரப்பு தகவல்

Follow Us