ஜெம் வீரமணி வழக்கை மூடி மறைக்க முயற்சி… பல கோடி கை மாறியிருக்கிறது… அமைச்சர் ராஜ்மோகன் பரபரப்பு தகவல்
Gem Veeramani Case : ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ஆர்.வீரமணி மீதான போக்சோ வழக்கு விவகாரம் குறித்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், உலகையே உலுக்கிய எப்ஸ்டீன் வழக்குபோல ஜெம் வீரமணியின் வழக்கு மாறியுள்ளது. வழக்கை மூடி மறைக்க பல கோடி ரூபாய் கொடுக்கப்பட்டு பலரின் வாய் மூடப்பட்டுள்ளது என்றார்.
சென்னை, செப்டம்பர் 22 : தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ஆர்.வீரமணி மீதான போக்சோ வழக்கு விவகாரத்தில், திடுக்கிடும் பின்னணி தகவல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், உலகையே உலுக்கிய எப்ஸ்டீன் வழக்குபோல ஜெம் வீரமணியின் வழக்கு மாறியுள்ளது. வழக்கை மூடி மறைக்க பல கோடி ரூபாய் கொடுக்கப்பட்டு பலரின் வாய் மூடப்பட்டுள்ளது என்றார்.
‘ஜெம் வீரமணி வழக்கை மூடி மறைக்க முயற்சி’
மேலும் பேசிய அவர், யாருக்காக, யாரைத் தப்பவைக்க இந்த வழக்கு மூடப்பட்டது என்பது மர்மமாக உள்ளது கடந்த ஆட்சியில் இந்த வழக்கை ஒழுங்காக விசாரித்திருந்தால் இது ஒரு விழிப்புணர்வாக மாறியிருக்கும். கடந்த ஆட்சியில் போதுமான ஆதாரங்கள் இல்லை என கூறி இந்த வழக்கை மூடியது மர்மமாக இருக்கிறது என்றார்.
மேலும் பேசிய அவர், காரணம் புகார் கொடுக்க ஆள் இல்லை என தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் யாராக இருநத்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையான தண்டனைகள் வாங்கி கொடுக்கப்பட வேண்டும் என தமிழக முதல்வர் விஜய் உத்தரவிட்டிருக்கிறார் என்றார்.




இதையும் படிக்க : பெண் மீது தீ வைத்த நபர் – துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸ்
முன்னதாக இந்த வழக்கு குறித்து பேசிய திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி, ஜெம் வீரமணி மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறார்கள். பின்பு எப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வீரமணி வழக்கில் புதிய ஆதாரங்கள், சாட்சி அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுப்பதற்காக காத்திருந்தோம். ஜெம் வீரமணி வழக்கை கைவிடுவதாக சொல்லவில்லை. உரிய ஆதாரங்களுக்காக காத்திருந்தோம். ஜெம் வீரமணிக்கும் திமுகவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஜெம் வீரமணி வழக்கில் யார் தொடர்புடையதாக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்றார்.
ஜெம் வீரமணி மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறார்கள். பின்பு எப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வீரமணி வழக்கில் புதிய ஆதாரங்கள், சாட்சி அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுப்பதற்காக காத்திருந்தோம் என்றார். இதனையடுத்து இந்த வழக்கு மிகவும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இதையும் படிக்க : காலை உணவுத் திட்டத்தை துவக்கம் – மாணவர்களுடன் உணவருந்திய முதல்வர் விஜய்
இதற்கிடையில் ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி மீதான பாலியல் வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வீரமணியிடம் பணியாற்றிய கணேசன் என்பவரை கைது செய்தது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவரிடம் இருந்து பல முக்கிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.