AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கூட்டுறவு வங்கிகளில் வைப்பு தொகைக்கு 8.25 சதவீதம் வட்டி!

Percent Deposit Interest Rate Announced For Cooperative Banks | தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் பெற்று ஏராளமான பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில், கூட்டு வங்கிகளின் வைப்பு தொகைக்கு 8.25 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கூட்டுறவு வங்கிகளில் வைப்பு தொகைக்கு 8.25 சதவீதம் வட்டி!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 22 Sep 2026 08:54 AM IST

சென்னை, செப்டம்பர் 22 : தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளின் (Cooperative Banks In Tamil Nadu) வைப்பு தொகைக்கான வட்டி ஆண்டுக்கு 8.25 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகள் பல்வேறு பிரிவுகளின் கீழ் கடன்களை வழங்குகின்றன. இந்த நிலையில் தான், வைப்பு தொகைக்கான வட்டி 8.25 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பொது குடிமக்களுக்கு இந்த வட்டி நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக 0.25 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கூட்டுறவு வங்கிகளின் வைப்பு தொகைக்கான வட்டி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பல்வேறு பிரிவுகளின் கீழ் கடன் வழங்கும் கூட்டுறவு வங்கிகள்

கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், பயிர் கடன், நகைக் கடன் உள்ளிட்ட பல பிரிவுகளில் பொதுமக்களுக்கு கடன் வழங்கி வருகின்றன. இதற்காக நிதியை கூட்டுறவு வங்கிகள் மக்களிடம் இருந்து வைப்பு தொகையாக பெறுவதுடன், நபார்டு என்ற தேசிய மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியிடம் இருந்து கடன் வாங்குகின்றன.

இதையும் படிங்க : கரூர் சம்பவம் ஓராண்டு நினைவு: 41 பேரின் நினைவாக நினைவுச்சின்னம் – செப்.27ல் அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் விஜய்

வைப்பு தொகைக்கான வட்டி நிர்ணயம்

தற்போது கூட்டுறவு வங்கிகளில் வைப்பு தொகைக்கான வட்டி, ஆண்டுக்கு 8.25 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவே மூத்த குடிமக்கள் என்றால் அவர்களுக்கு 0.25 சதவீதம் கூடுதலாக வழங்கப்படும். அதாவது, 8.50 சதவீதம் அவர்களுக்கு வட்டி வழங்கப்படும். இதுமட்டுமன்றி, நகைக்கடனுக்கான தொகையிலும் முக்கிய மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : “விஜய் ஆட்சிக்கு எதிரான முதல் அடி” – மதுராந்தகம் களத்தில் உதயநிதி ஸ்டாலின்

எது குறைவோ அந்த தொகை வழங்கப்பட உள்ளது

ஒரு கிராம் தங்கத்திற்கு வழங்கப்படும் கடன் தொகை ரூ.10,000 அல்லது தங்கத்தின் சந்தை மதிப்பில் 75 சதவீதம் என இரண்டில் எது குறைவோ அந்த தொகை வழங்கப்பட உள்ளது. ஏராளமான மக்கள் கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் பெற்று பயனடைந்து வரும் நிலையில், இது மிகவும் முக்கியமான அறிவிப்பாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us