AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

புயல் உருவாக வாய்ப்பு…. சென்னை காசிமேடு மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப உத்தரவு

Kasimedu Fishermen Cyclone Alert : தென்கிழக்கு வங்கக்கடலில் வருகிற நவம்பர் 13, 2026 அன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும் அது புயலாகமாறவும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து சென்னை காசிமேடு மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

புயல் உருவாக வாய்ப்பு…. சென்னை காசிமேடு மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப உத்தரவு
கோப்புப்படம்Image Source: tv9
Karthikeyan S
Karthikeyan S | Published: 11 Nov 2026 07:50 AM IST

சென்னை, நவம்பர் 11 : தென்கிழக்கு வங்கக்கடலில் வருகிற நவம்பர் 13, 2026 அன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் இன்றும் அதற்கடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும் என்றும் அது புயலாக (Cyclone) மாறவும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை காசிமேடு மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப உத்தரவு

இந்த நிலையில், குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி அது புயலாக மாறக்கூடும் என்பதால் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற சென்னை காசிமேடு மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த பாதுகாப்பு விதிகளையும் எச்சரிக்கையையும் மீறி கடலில் தங்கியிருக்கும் படகுகள் மற்றும் மீனவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மீன்வளத்துறை சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : செஞ்சி சிறுமி மாயமாகி 30 நாளாகிறது.. தவெக அரசு என்ன செய்கிறது.. கனிமொழி எம்.பி.எழுப்பிய கேள்வி!

முன்னதாக சென்னை காசிமேடு பகுதி மீனவர்கள் ஆந்திர கடல் பகுதியில் படகு என்ஜின் பழுதாகி கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முரசு புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், உத்தரவை மீறி மீனவர்கள் கடலுக்கு சென்றதே அவர்களது மரணத்துக்கு காரணம் என கடலோர காவல் படை விளக்கமளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 9 மீனவர்கள் கடந்த அக்டோபர் 29, 2026 அன்று, விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அப்போது திடீரென புயல் ஏற்பட பாதுகாப்பு காரணங்களுக்காக ஆந்திர மாநிலம் நிஜாம்பட்டினம் துறைமுகத்தில் படகை நிறுத்தியுள்ளனர். புயல் கரையைக் கடந்த பிறகு மீன்பிடிக்க சென்ற நிலையில் நடுக்கடலில் விசைப்படகின் என்ஜின் பழுதடைந்தததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கடந்த, நவம்பர் 3, 2026 அன்று அதிகாலை 3.30 மணியளவில் வயர்லெஸ் கருவி மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன் பிறகு அவர்களை தொடர்பு கொள்ள முடியாமல் இருந்துள்ளது. இதனையடுத்து, மீனவர்களைத் தேடும் பணியில் ஹெலிகாப்டர்கள் மற்றும் கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டன. இந்நிலையில் தான் ஆந்திர மாநிலம் கோத்தப்பட்டினம்மற்றும் பள்ளிபாலம், ஒங்கோல் ஆகிய கடற்கரைப் பகுதிகளில் 9 பேரின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க : நீலகிரியில் மீண்டும் மலை ரயில் சேவை ரத்து.. கன மழையால் திடீர் அறிவிப்பு.. சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!

புதிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என சென்னை வானிலை மையம் எச்சரித்த நிலையில் தமிழகத்தில் வருகிற நவம்பர் 15, 2026 அன்று தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், ராணிப்பேட்டை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Follow Us