AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அரசு மணல் குவாரி குத்தகைதாரர் வீட்டில் லட்சக்கணக்கில் நகை-பணம் கொள்ளை.. சிறிது சிறிதாக திருடிய தாய்-மகள் அதிரடி கைது.. வேலூரில் துணிகரம்!

Vellore Theft Case : வேலூரில் அரசு மணல் குத்தகைதாரர் வீட்டில் ஆண்டுக்கணக்கில் சிறிது சிறிதாக நகை மற்றும் பணத்தை திருடியதாக வீட்டில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வந்த தாய் மற்றும் மகளை போலீசார் அதிரடியாக கைது செய்தனர் .

அரசு மணல் குவாரி குத்தகைதாரர் வீட்டில் லட்சக்கணக்கில் நகை-பணம் கொள்ளை.. சிறிது சிறிதாக திருடிய தாய்-மகள் அதிரடி கைது.. வேலூரில் துணிகரம்!
நகை திருட்டில் கைதான தாய்- மகள்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 22 Sep 2026 21:35 PM IST

வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே உள்ள தொண்டான் துளசி கிராமத்தை சேர்ந்தவர் சேகர் ரெட்டி. இவர், அரசு மணல் குவாரி குத்தகைதாரராகவும், திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார். இவருக்கு சொந்தமான வீடு ஒன்று காட்பாடி அருகே உள்ள காந்திநகர் பகுதியில் டான் பாஸ்கோ பள்ளி சாலையில் அமைந்துள்ளது. இந்த நிலையில், இவரது மகளுக்கு அண்மையில் மிகப் பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவின்போது, குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிக அளவு வருகை தந்திருந்தனர். இதனை சாதகமாக பயன்படுத்திய அந்த வீட்டில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வந்த ஊசூர் அருகே உள்ள கலங்கமேடு பகுதியை சேர்ந்த ராணி, அவரது மகள் மகாலட்சுமி ஆகியோர் சேர்ந்து சிறிது சிறிதாக தங்க நகைகளை திருடி வந்துள்ளனர்.

நகையை திருடி வீட்டு மனைகள் வாங்கிய தாய்-மகள்

இந்த நகைகளை விற்பனை செய்து அதன் மூலம் கிடைத்த பணத்தால் வீட்டு மனைகள் வாங்கி உள்ளனர். இதனால், சந்தேகம் அடைந்த துத்திப்பட்டு பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் தாய் மற்றும் மகளை மிரட்டி விவரங்களை கேட்டறிந்தனர். அப்போது, மேலும் நகை கொள்ளை அடிப்பதற்கு தங்களுக்கு உதவியாக இருக்குமாறு தாய் மற்றும் மகளை அந்த இளைஞர்கள் வற்புறுத்தி உள்ளனர். இதற்கு, அவர்கள் சம்மதம் தெரிவித்த நிலையில், தொடர்ந்து இந்த கும்பல் சேகர் ரெட்டியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தங்க நகைகள் மற்றும் லட்சக்கணக்கில் பணத்தை கொள்ளையடித்து சென்றது.

மேலும் படிக்க: முதல்வர் விஜய்யுடன் ஏன் லண்டன் செல்லவில்லை? அமைச்சர் கீர்த்தனா ஆதாரத்துடன் விளக்கம்.. என்ன அது!

விருதம்பட்டு போலீசார் அதிரடி விசாரணை

இது குறித்து அறிந்த சேகர் ரெட்டி தனது மேலாளர் சந்திரசேகர் மூலமாக விருதம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா கட்சிகள் மற்றும் சந்தேகத்தின் அடிப்படையில் பணிப்பெண்களான ராணி மற்றும் அவரது மகள் மகாலட்சுமி ஆகியோரிடம் அதிரடி விசாரணை மேற்கொண்டனர். இதில், தங்க நகை மற்றும் பணத்தை திருடியதை இருவரும் ஒத்துக் கொண்டனர்.

ரூ.3 லட்சம்- சொத்து ஆவணங்கள் பறிமுதல்

அதன் அடிப்படையில், இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ. 3 லட்சம் ரொக்கம் மற்றும் 3 அசையா சொத்துக்களின் ஆவணங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் எவ்வளவு நகை மற்றும் பணம் திருடப்பட்டது என்பது தெரியவரும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: பசும்பொன் மக்கள் கட்சியின் தலைவர் அதிரடி கைது.. தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு.. பின்னணி என்ன!

Follow Us