அதிரப்போகும் கொங்கு மண்டலம்.. தாராபுரத்தில் தவெக பிரம்மாண்ட பொதுக்கூட்டம்.. என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்?
TVK Leader Joseph Vijay : தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து செப்டம்பர் 30- ஆம் தேதி நடைபெற்றும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் முதல் அமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்று பேச உள்ளார். இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு அக்டோபர் 6- ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், தமிழக வெற்றி கழகம் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியில் சத்யபாமாவும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தீவிர பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, மதுராந்தகம் தொகுதியில் வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 2- ஆம் தேதிகளில் முதல்வர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதில், செப்டம்பர் 25- ஆம் தேதி மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட்ட அச்சரப்பாக்கத்தில் தவெக பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் சாலை வலம்
இந்த பொதுக்கூட்டத்தில் முதல் அமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்று பேச உள்ளார். இதேபோல, அக்டோபர் 2- ஆம் தேதி மதுராந்தகத்தில் முதல் அமைச்சர் ஜோசப் விஜய் சாலை வலம் மேற்கொள்ள உள்ளார். அத்துடன், வாகனத்தில் இருந்தபடியே தவெக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார். தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து முதல்வர் விஜய் மேற்கொள்ளும் பிரச்சாரம் மற்றும் நிகழ்ச்சி உள்ளிட்டவை தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும் படிக்க: அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அவதூறு வழக்கு… நீதிமன்றத்தில் மு.க. ஸ்டாலின் கொடுத்த பதிலடி.. முழு விவரம்!




தாராபுரத்தில் தவெக பிரம்மாண்ட பொதுக்கூட்டம்
அதன்படி, வருகிற செப்டம்பர் 30- ஆம் தேதி தாராபுரம் தொகுதியில் சத்யபாமாவை ஆதரித்து முதல்- அமைச்சர் ஜோசப் விஜய் தீவிர பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில், தாராபுரம் தொகுதிக்கு உட்பட்ட மாருதி நகர் பகுதியில் பிரம்மாண்ட தவெக பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக சுமார் 54 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட அரங்கம் அமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பொதுக்கூட்ட மேடையில் முதல் அமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.
5 முனைப்போட்டியை சந்திக்கும் இடைத்தேர்தல்
இதனால், இரு தொகுதிகளிலும் தமிழக வெற்றி கழகத்தினரின் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த இடைத்தேர்தலில் தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என 5 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. தவெக சார்பில் களமிறக்கப்பட்டுள்ள மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் அதிமுகவில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: தவெக அரசுக்கு சொல் புத்தியும் இல்லை… சுய புத்தியும் இல்லை… எடப்பாடி பழனிசாமி கடுமையாக விளாசல்!