AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“வழக்கை மூட உத்தரவிட்டது யாரு?”.. ஜெம் வீரமணி விவகாரத்தில் திமுகவுக்கு அமைச்சர் ராஜ்மோகன் சரமாரி கேள்வி!

Minister Rajmohan Sharp Questions to DMK: ஜெம் வீரமணி மீதான பாலியல் வழக்கு தொடர்பாகத் திமுக அரசை நோக்கி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கடுமையான கேள்விகளை அமைச்சர் ராஜ்மோகன் எழுப்பியுள்ளார். இவ்வழக்கு முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் இருப்பதாகவும், தவெக ஆட்சியில் பாலியல் வழக்குகளில் ஈடுபட்டவர்கள் எவரும் தப்ப முடியாது என்றும் அவர் சென்னை எழும்பூரில் உறுதியளித்தார்.

“வழக்கை மூட உத்தரவிட்டது யாரு?”.. ஜெம் வீரமணி விவகாரத்தில் திமுகவுக்கு அமைச்சர் ராஜ்மோகன் சரமாரி கேள்வி!
அமைச்சர் ராஜ்மோகன்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 23 Sep 2026 12:35 PM IST

சென்னை, செப்.23: தமிழக அரசியலிலும் சமூகத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள ஜெம் வீரமணி மீதான பாலியல் வழக்கு விவகாரம், தற்போது ஆளுங்கட்சிக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இடையிலான கடுமையான அரசியல் மோதலாக உருவெடுத்துள்ளது. சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் தொடர்பான புகார்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த வழக்கைக் கையாண்ட விதம் குறித்துப் பலதரப்பட்ட விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வெற்றிக் கழக அமைச்சர் ராஜ்மோகன், இந்த விவகாரத்தில் திமுக அரசின் அணுகுமுறையைக் கடுமையாகக் கண்டித்து, அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார்.

இதையும் படிக்க: முதல்வர் விஜய்யுடன் ஏன் லண்டன் செல்லவில்லை? அமைச்சர் கீர்த்தனா ஆதாரத்துடன் விளக்கம்.. என்ன அது!

“வழக்கை மூட உத்தரவிட்டது யார்?” அமைச்சர் கேள்வி:

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், ஜெம் வீரமணி மீதான வழக்கில் திமுக அரசிடமும் அதன் தலைவர்களிடமும் கேட்கச் சில முக்கியமான கேள்விகள் இருப்பதாகத் தெரிவித்தார். கடந்த காலத்தில் இந்த வழக்கில் எதுவுமே இல்லை என்று கூறி, வழக்கை கைவிட அல்லது மூட உத்தரவிட்டது யார் என்றும், அந்த அதிகாரம் மிக்க தனிநபர் அமைச்சரா, அதிகாரியா அல்லது அப்போதைய திமுக தலைமைப் பொறுப்பில் இருந்தவரா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார். மேலும், அதிகார பலமும் அரசியல் பின்னணியும் கொண்ட நபர்களுக்கு எதிராக வழக்குகள் வரும்போது, விசாரணை நடத்தப்படாமல் தடுப்பது யார் என்பதையும் வெளிப்படையாகக் கூற வேண்டும் என வலியுறுத்தினார்.

ஓராண்டு காலம் விசாரணையை முடக்கியது யார்?:

தவெக அரசு பொறுப்பேற்ற குறுகிய காலத்தில் இந்த வழக்கில் தீவிர விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையைச் சுட்டிக்காட்டிய அவர், திமுக ஆட்சிக் காலத்தில் ஒரு வருட காலம் இந்த விசாரணை ஏன் கிடப்பில் போடப்பட்டது என்று வினவினார். இத்தனை தீவிரமான வழக்கில் ஒரு வருட காலம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருக்குமாறு உத்தரவிட்ட பின்னணி யார் என்பதும் வெளிவர வேண்டும் என்றார். 8 வயது மற்றும் 10 வயதுச் சிறுமிகள் கூட பாதிக்கப்பட்டு வெளியே வந்து சாட்சியளிக்கும் இந்தத் திகிலூட்டும் சூழலில், திமுக ஆதரவாளர்களும் அவர்களின் சமூக வலைதளக் கணக்குகளும் வழக்கை திசை திருப்ப முயல்வது ஏன் என்றும், இன்னமும் யாரைக் காப்பாற்ற நினைக்கிறார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

இதையும் படிக்க: அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அவதூறு வழக்கு… நீதிமன்றத்தில் மு.க. ஸ்டாலின் கொடுத்த பதிலடி.. முழு விவரம்!

அமைச்சர் ரகுபதி பேச்சுக்குக் கடும் கண்டனம்:

முன்னாள் அமைச்சர் ரகுபதி இந்த வழக்கின் வீடியோ ஆதாரம் குறித்துப் பேசிய வார்த்தைகளுக்குத் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்த ராஜ்மோகன், சற்று மனசாட்சியோடும் மனிதாபிமானத்தோடும் பேச வேண்டும் எனச் சாடினார். வீடியோவின் தரம் தெளிவாக உள்ளதா இல்லையா என்பதைத் தாண்டி, அதில் சம்பந்தப்பட்ட குற்றத்தின் கோரத் தன்மையைக் கவனிக்க வேண்டும் என்றார். இறுதியாக, இந்த ஜெம் வீரமணி வழக்கு முதலமைச்சரின் நேரடி மற்றும் தனிப்பட்ட கண்காணிப்பில் இயங்கி வருவதாகவும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் எவரும் தப்ப முடியாது என்றும் உறுதியளித்தார். மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்து, நீதியை நிலைநாட்டுவதில் அரசு உறுதியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Follow Us