AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அஜித்தை முதல்வராக்குவதே லட்சியம் – மேலும் ஒரு புதிய கட்சியைத் தொடங்கிய ரசிகர்கள்

Ajith Fans Launch Another Political Party : காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் நடிகர் அஜித்குமாரை முன்னிறுத்தி 'அனைத்து நண்பர்கள் முன்னேற்றக் கழகம்' என்ற பெயரில் அவரது ரசிகர்கள் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளனர். மேலும், வருகிற 2031ஆம் ஆண்டு அஜித்தை தமிழக முதல்வராக்குவதே தங்களது லட்சியம் எனவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

அஜித்தை முதல்வராக்குவதே லட்சியம்  – மேலும் ஒரு புதிய கட்சியைத் தொடங்கிய ரசிகர்கள்
புதிய கட்சி தொடங்கிய நடிகர் அஜித்குமார் ரசிகர்கள்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 23 Sep 2026 08:45 AM IST

காஞ்சிபுரம், செப்டம்பர் 23 : காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் நடிகர் அஜித்குமாரை முன்னிறுத்தி ‘அனைத்து நண்பர்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற பெயரில் அவரது ரசிகர்கள் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளனர். மேலும், வருகிற 2031ஆம் ஆண்டு அஜித்தை தமிழக முதல்வராக்குவதே தங்களது லட்சியம் எனவும் அவர்கள் அறிவித்துள்ளனர். இதனையடுத்து மாவட்ட வாரியாக மக்கள் நலப்பணிகளை மேற்கொள்ளப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஒரு புதிய கட்சியைத் தொடங்கிய அஜித் ரசிகர்கள்

முன்னதாக கடந்த செப்டம்பர் 20, 2026 அன்று கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூர்கோட்டை என்ற ஊரில் நடிகர் அஜித்குமாரின் ரசிகர்கள் ஒருங்கிணைந்து ‘தமிழக மக்கள் கழகம்’ என்ற புதிய கட்சியை தொடங்கியிருந்தனர். மேலும் கட்சிக்கான புதிய கொடியையும் அவர்கள் அறிமுகம் செய்துள்ளனர். கட்சியின் கொடி தவெக கொடியை போல வடிவமைக்கப்பட்டிருந்தததும் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : வலுவடையும் காற்றழுத்த தாழ்வு பகுதி – இந்த மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

கடந்த 2026 சட்டமன்ற தேர்தலில் திரையுலகில் பிரபல நடிகராக இருந்த விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழம் கூட்டணி கட்சிகளின் ஆதரவில் ஆட்சியமைத்த நிலையில், தமிழகத்தில் நடிகர்கள் அரசியலுக்கு வருவது தொடர்பான பேச்சு அதிகரித்திருக்கிறது. குறிப்பாக நடிகர் தனுஷின் பிறந்த நாள் நிகழ்வில் அவரது பேச்சும், ரசிகர் மன்றத்தினரின் செயல்பாடுகளும் அவர் அரசியல் வருகையை மறைமுகமாக உணர்த்துவது போல அமைந்தது. அது போல நடிகர் ரவி மோகனின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற ரசிகர் மன்ற நிகழ்வில் பேசிய நிர்வாகி ஒருவர் ரவி மோகன் அரசியலுக்கு வருவது போல பேசியதும் சர்ச்சையானது.

இதையும் படிக்க : கருப்பு கோட்டு, பொட்டு.. “அந்த ஜோசியக்காரனையே CM ஆக்கியிருக்கலாம்!”.. முதல்வர் விஜய்யை விளாசிய சீமான்!!

இந்த நிலையில் தமிழ் திரையுலகில் விஜய்க்கு போட்டியாக அறியப்பட்டவர் நடிகர் அஜித்குமார். இரண்டு நடிகர்களின் படங்களும் ஒரே நாளில் வெளியானால் யார் படம் வெற்றி? யார் படத்துக்கு அதிக வசூல் என ரசிகர்களிடையே பெரும் போட்டியே நிலவும். இந்த நிலையில் விஜய் அரசியலுக்கு வந்து முதல்வரான நிலையில், திரையுலகில் அவருக்கு போட்டியாக இருந்த நடிகர் அஜித்தும் அரசியலுக்கு வரவேண்டும் என்பது அவர்களது எதிர்பார்ப்பாக இருக்கிறது. மேலும் வழக்கமாக ரசிகர்களின் இது போன்ற செயல்களுக்கு நடிகர் அஜித்திடம் இருந்து எந்தவித மறுப்பும் வெளியாகாமல் உள்ளதும் சமூக வலைதளங்களில் விவாதமாகியுள்ளது.

 

Follow Us