AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கருப்பு கோட்டு, பொட்டு.. “அந்த ஜோசியக்காரனையே CM ஆக்கியிருக்கலாம்!”.. முதல்வர் விஜய்யை விளாசிய சீமான்!!

Seeman Speech Against Vijay: “ஜோசியக்காரன் பேச்சு கேட்டு நெத்தியில் பொட்டு வைத்து, கருப்பு கோட் போடுவதற்கு அந்த ஜோசியக்காரனையே முதலமைச்சர் ஆக்கியிருக்கலாம்” என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், தேவையில்லாத இடைத்தேர்தல், மின்கட்டண உயர்வு, தொடர் மின்தடை மற்றும் விளம்பரச் செலவுகள் குறித்தும் பிரசாரக் கூட்டத்தில் அவர் அடுக்கடுக்காகக் குற்றம் சாட்டினார்.

கருப்பு கோட்டு, பொட்டு.. “அந்த ஜோசியக்காரனையே CM ஆக்கியிருக்கலாம்!”.. முதல்வர் விஜய்யை விளாசிய சீமான்!!
சீமான், முதல்வர் விஜய்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 23 Sep 2026 06:39 AM IST

திருப்பூர், செப்.23:  தமிழக அரசியல் களத்தில் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தவெக அரசு மற்றும் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய்யின் நிர்வாகச் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில், தாராபுரத்தில் பிராச்சர கூட்டத்தில் பேசிய அவர், சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் வேறு கட்சியில் இணைந்து இடைத்தேர்தலைச் சந்திப்பது மக்களுக்கான துரோகம் என்றும், இதனால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், மாநிலத்தில் நிலவும் மின்தடை, வரி உயர்வு மற்றும் பிற மாநிலங்களில் கொடுக்கப்படும் விளம்பரங்கள் குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை அவர் எழுப்பியுள்ளார்.

இதையும் படிக்க: TN 07 CM 2031- காரில் பயணித்த தொல்.திருமாவளவன்.. விடுதலை சிறுத்தைகள் கட்சி அளித்த விளக்கம்!

வரிப்பண விரயம் குறித்த சாடல்:

பிரசாரக் கூட்டத்தில் பேசிய சீமான், தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்றுச் சில நாட்களிலேயே பதவியை விலகி வேறு கட்சியில் இணைந்து மீண்டும் போட்டியிடுவதைச் சுட்டிக்காட்டினார். வெற்றி பெற்ற வேட்பாளரை வலுக்கட்டாயமாகப் பதவி விலகச் செய்து மீண்டும் இடைத்தேர்தலை நடத்துவதில் என்ன மாண்பு இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார். இது முற்றிலும் அதிகார மமதை மற்றும் சர்வாதிகாரப் போக்கு என்றும், மக்களுடைய வரிப்பணம் இதன் மூலம் பெருமளவில் தண்டச் செலவு செய்யப்படுவதாகவும் குற்றம் சாட்டிய அவர், இத்தகைய மெத்தனப் போக்கிற்கு மக்கள் தேர்தலின் மூலம் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என வலியுறுத்தினார்.

அமைச்சர்களுக்கு எதிரான விமர்சனம்:

தொடர்ந்து பேசிய அவர், முதல்வர் விஜய்யின் திடீர் ஆய்வுகள் மற்றும் பயணங்கள் அனைத்தும் விளம்பர அரசியலே தவிர அதில் உண்மைத்தன்மை இல்லை என்றார். ரூ.600 ஆக இருந்த மின்கட்டணம் தற்போது ரூ.6,000 ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையிலும், மாநிலத்தில் தொடர்ந்து மின்தடை நிலவுவதாகத் தெரிவித்தார். மின்தடை என்று கூறாமல் ‘மின் பற்றாக்குறை’ என்று வார்த்தை விளையாட்டு நடத்தும் அமைச்சர்கள், பஞ்சாப் போன்ற பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பேசுவது ஏற்புடையதல்ல என்றும் கண்டித்தார். மேலும் பால்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர்களின் செயல்பாடுகளையும் அவர் கடுமையாகக் கிண்டல் செய்தார்.

ஜோசியரை CM ஆக்கியிருக்கலாம்:

இங்கு நோ ரூல்ஸ், ஒன்லி ரீல்ஸ் தான் இருக்கிறது. மெட்ரோ ரயிலில் போகிறார், அப்புறம் ஏன் ஜெயிலுக்குப் போனார் என்று யாருக்கும் தெரியவில்லை. எவனோ ஒரு ஜோசியக்காரன் ‘உங்களுக்கு ஜெயிலில் ஒரு கண்டம் இருக்கிறது, போய் கையை நனைத்துவிட்டு வாருங்கள்’ என்று சொல்லியிருக்கிறான். திஷ்டி அதிகமாக இருக்கிறது என்பதால் கருப்பு கோட் போட்டுக்கொண்டு, நெற்றியில் கருப்பு பொட்டு வைத்துக்கொள்ளச் சொல்கிறான். இவன் பேச்சைக் கேட்டு இப்படிச் செய்வதற்கு, அந்த ஜோசியக்கார பையனையே முதலமைச்சர் ஆக்கியிருக்கலாம்!” என்று சாடினார். மேலும் கடற்கரையைப் பார்த்தபடி அலுவலகத்தை மாற்றுவது வரை ஜோதிட ஆலோசனைகளின் படியே முடிவுகள் எடுக்கப்படுவதாக அவர் கடுமையாகக் குற்றம் சாட்டினார்.

இதையும் படிக்க: முதல்வர் விஜய்யுடன் ஏன் லண்டன் செல்லவில்லை? அமைச்சர் கீர்த்தனா ஆதாரத்துடன் விளக்கம்.. என்ன அது!

விளம்பர அரசியலும் அரசின் செயல்பாடுகளும்:

தமிழக அரசின் 100 நாள் சாதனை விளம்பரங்களை கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்ற பிற மாநில நாளிதழ்களில் முழுப் பக்க விளம்பரமாக வெளியிடுவதன் மூலம் மக்களின் நிதி வீணடிக்கப்படுவதாகச் சீமான் சாடினார். பொங்கல் மற்றும் பிற திட்டங்களுக்கான அறிவிப்புகள் வரும் முன்பே பல நூறு கோடிகளில் விளம்பரம் கொடுப்பது ‘செய்தி அரசியல்’ மட்டுமே என்று கூறிய அவர், மின்சாரத்தின் அருமையை உணர்த்த எடிசன் பிறந்தநாளில் அமெரிக்காவில் மின்சாரத்தை நிறுத்திய கதையைக் கூறி, இங்குப் பத்து மணி நேரத்திற்கு மேலாக மின்சாரத்தைத் துண்டித்து ஆட்சி நடத்துவதாக சாடினார்.

Follow Us