AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மதுவை விற்க கள்ளுக்கு தடையா? தமிழக அரசை வெளுத்து வாங்கிய சீமான்.. ஆவேசத்தில் கொந்தளிப்பு!

NTK Seeman Latest Speech : தமிழகத்தில் கள் இறக்குவதற்கு எதிரான தடையை நீட்டிப்பதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தமிழக அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார் .

மதுவை விற்க கள்ளுக்கு தடையா? தமிழக அரசை வெளுத்து வாங்கிய சீமான்.. ஆவேசத்தில் கொந்தளிப்பு!
சீமான், விஜய்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 22 Sep 2026 17:12 PM IST

தமிழகத்தில் மீண்டும் கள் இறக்குவதற்கு எதிரான தடையை நீக்க முடியாது என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இதற்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பனை மற்றும் தென்னை மரங்களில் இருந்து கள் இறக்குவதற்கும், விற்பனை செய்வதற்கும் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க முடியாது என்று தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருப்பது கண்டனத்துக்குரியதாகும். கள் என்பது தமிழர்களின் வாழ்வியலோடும், பண்பாட்டோடும் கலந்ததாகும். பனைவெல்லம், பதநீர், பனங்கருப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பனை பொருட்களை ஊக்குவிக்கும் அரசு அதே பனை மரத்தில் இருந்து பெறப்படும் கள்ளுக்கு மட்டும் தடையை தொடர்வது ஏன் என்று தெரியவில்லை.

டாஸ்மாக்குகளில் விற்பது புனித தீர்த்தமா

தமிழகத்தின் மாநில மரம் பனை என்பது தமிழக வெற்றிக்கழக அரசுக்கு தெரியுமா அல்லது தெரியாதா. கள் போதை பொருள் என்றால், அரசு டாஸ்மாக்குகளில் விற்பது என்ன புனித தீர்த்தமா என்று கேள்வி எழுப்பினார். மேலும், அரசு விற்பனை செய்யும் மலிவு விலை மது தான் மக்களின் உடல்நலத்தை கெடுக்கிறதே தவிர நம் நாட்டு கள் கெடுப்பது கிடையாது. டாஸ்மாக்குகளில் மது விற்பனை செய்பவர்களுக்கு சீருடை, ஊக்கத்தொகை அளித்து ஊக்குவிப்பதும், உணவகத்துடன் கூடிய மது கூடங்களை திறப்பதும், இணையதளம் மூலமாக மது விற்பனை செய்வதும் தான் மதுவை ஒழித்து மக்களை காக்கும் தவெக அரசின் முறையா.

மேலும் படிக்க: ஜெம் கிராணைட் வீரமணிக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை… திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி விளக்கம்

கள் உற்பத்தியில் கண்காணிப்பு முறையை கொண்டு வர முடியாதா

வெளிநாட்டு மதுபானங்களை அரசு விற்கலாம். ஆனால், நம் நாட்டு பனை தொழிலாளி கள் இறக்கக்கூடாதா. கள் உற்பத்தியில் கலப்படம் ஏற்படும் ஆபத்து மற்றும் விற்பனையை கண்காணிப்பதில் உள்ள சிரமங்கள் ஆகியவற்றை தமிழக அரசு தடைக்கான காரணமாகவே முன்வைக்கின்றது வெட்கக்கேடானது. உள்நாட்டு, வெளிநாட்டு மதுக்களின் விற்பனையையும், தரத்தையும் ஒழுங்குபடுத்தும் அரசு கள் உற்பத்தியை மட்டும் உரிமம், தர கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு முறைகளின் கீழ் கொண்டு வர முடியாதா.

பிரமாண பத்திரத்தை திரும்ப பெற வேண்டும்

கள் விற்பனையில் கலப்படம் நடைபெறும், சட்டவிரோத விற்பனை நடைபெறும் என்றால் அவற்றை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இதனை விடுத்து விட்டு கள்ளுக்கு தடை விதித்து பனை தொழிலை நம்பி வாழும் ஏராளமான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை முடக்குவது சரியல்ல. எனவே, பிரமாண பத்திரத்தை தமிழக அரசு திரும்பப்பெற்று கள் மீதான தடையை உடனடியாக நீக்க வேண்டும் என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அவதூறு வழக்கு… நீதிமன்றத்தில் மு.க. ஸ்டாலின் கொடுத்த பதிலடி.. முழு விவரம்!

Follow Us