AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 55 பவுன் தங்க கிரீடம் மாயம்.. என்ன தான் நடந்தது.. போலீசாரின் முதல் கட்ட விசாரணை கூறுவதென்ன!

Sabarimala Temple Gold Crown Missing : சபரிமலை ஐயப்பன் கோயிலில் 55 பவுன் எடை உள்ள தங்க கிரீடம் மாயமாகி உள்ளது. இந்த கிரீடம் எப்படி மாயமானது, இதுகுறித்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் என்ன தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை பார்க்கலாம்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 55 பவுன் தங்க கிரீடம் மாயம்.. என்ன தான் நடந்தது.. போலீசாரின் முதல் கட்ட விசாரணை கூறுவதென்ன!
சபரிமலை ஐயப்பன் கோயில்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 24 Sep 2026 16:09 PM IST

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உலக புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் சுவாமி ஐயப்பனின் 55.75 பவுன் எடை கொண்ட தங்க கிரீடம் ஒன்று இருந்தது. இந்த கிரீடமானது தற்போது, மாயமாகியுள்ளது இதற்கு பதிலாக போலி கிரீடம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த தங்க கிரீடம் மாயமானது கோயிலில் உள்ள பொருட்கள் பராமரிப்பு குறித்த கேள்விகளை எழுப்பி உள்ளது. கடந்த 2012- ஆம் ஆண்டு தமிழகத்தை சேர்ந்த ஒரு பக்தரால் தங்க கிரீடம் சபரிமலை கோவிலுக்கு காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. இந்த கிரீடமானது கோயிலில் மிகவும் மதிப்புமிக்க பொருட்களில் ஒன்றாக விளங்கி வந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கேமரா இல்லாத இடத்தில் இருந்த தங்க கிரீடம்

மேலும், கோவில் வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், கேமரா இல்லாத பகுதியில் அந்த கிரீடம் வைக்கப்பட்டிருப்பது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பாதுகாப்பு அறையில் இருந்து எப்போது அந்த கிரீடம் மாற்றப்பட்டது என்பதையும், இதற்கு பதிலாக போலி கிரீடத்தை வைத்தவர் யார் என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரிய தலைவர் ஜெயக்குமார் இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்து, பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் படிக்க: இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களும் ஏன் இவ்வளவு வித்தியாசமாக இருக்கின்றன?

தங்க கிரீடம் காணாமல் போகவில்லை

மேலும், இந்த விவகாரம் கேரள உயர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே, தங்க கிரீடம் காணாமல் போகவில்லை என்று திருவாபரணம் ஆணையர் கூறியுள்ளார். அசல் கிரீடமும், அதே மாதிரியான மற்றொரு கிரீடமும் அங்கு உள்ளன. தேவஸ்வம் ஆணையருக்கு அளித்த விளக்கத்தில் மதிப்பு மிக்க பொருட்களுக்கு இது போன்ற மாதிரிகள் வைக்கப்பட்டுள்ளதாக திருவாபரணம் ஆணையர் கூறியுள்ளார்.

ஆபரண பொருள் சரிபார்ப்பின்போது கிரீடம் மாயம்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் நன்கொடையாக வழங்கும் விலை மதிப்புள்ள பொருட்களின் பாதுகாப்புக்கு கோவில் நிர்வாகமும், சம்பந்தப்பட்ட தேவஸ்வம் வாரியமும் பொறுப்பாகும். தற்போது, கிரீடம் காணாமல் போன விவகாரத்தில் உள் நபர்களுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, நீதிபதி சங்கரன் தலைமையில் சபரிமலை ஆபரண பொருட்கள் சரிபார்ப்பு நடைபெற்ற போது தங்க கிரீடம் காணாமல் போனதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் படிக்க: நமக்கு ஏன் நாடாளுமன்றம் தேவை? நாட்டின் ஆட்சி நிர்வாகத்தில் பங்கு என்ன?

Follow Us