AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஜெம் வீரமணி பாலியல் வழக்கு.. 3 காவல் அதிகாரிகளுக்கு சம்மன்.. மேலும் புதிய ஆபாச வீடியோக்கள்? அடுத்தடுத்து அதிர்ச்சி!

Gem Veeramani Harassment Case : ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி பாலியல் வழக்கில் காவல் உதவி ஆணையர் மற்றும் 2 காவல் ஆய்வாளர்களுக்கு மத்திய குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். அவரது செல்போன்களில் புதிய ஆபாச காட்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது.

ஜெம் வீரமணி பாலியல் வழக்கு.. 3 காவல் அதிகாரிகளுக்கு சம்மன்.. மேலும் புதிய ஆபாச வீடியோக்கள்? அடுத்தடுத்து அதிர்ச்சி!
வீரமணி
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 24 Sep 2026 14:46 PM IST

தமிழகத்தில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி மற்றும் அவருக்கு உதவியாக இருந்ததாக உதவியாளர் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்கன் ஆகியோரை மத்திய குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனிடையே ஜெம் வீரமணி தொடர்புடைய இடங்களான கோபாலபுரம் மற்றும் டி. நகர் ஆகிய பகுதிகளில் குற்றப் புலனாய்வு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில், செல்போன்கள், டிஜிட்டல் ஆவணங்கள் மற்றும் ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள் மற்றும் ஆவணங்களை போலீசார் ஆய்வுக்கு உட்படுத்தி வருகின்றனர். டிஜிட்டல் ஆவணங்களை தொழில்நுட்ப வல்லுநர்கள் வாயிலாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வீரமணி செல்போன்களில் புதிய ஆபாச காட்சிகள்

இதில், ஏற்கனவே ஜெம் வீரமணி, பல்வேறு சிறுமிகளுடன் இருந்த பாலியல் காட்சிகளை போலீசார் கைப்பற்றி இருந்தனர். இந்த நிலையில், தற்போது நடைபெற்ற சோதனையில் கைப்பற்றப்பட்ட செல்போன்களில் கூடுதலாக புதிய ஆபாச வீடியோக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அது தொடர்பாக போலீசார் விரிவான ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதே போல, கைதான சாந்தி மற்றும் கணேசன் ஆகியோரின் செல்போன்கள் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு தொழில்நுட்ப ரீதியான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க: சென்னையில் கொடூரம்.. படிக்கட்டுப் பயணத்தை கண்டித்த நடத்துனர் மீது மாணவர்கள் சரமாரி தாக்குதல்!

டிஜிட்டல் ஆதாரங்கள் மூலமாக ஆதரம் திரட்டும் போலீஸ்

இதில், செல்போன்களில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட தகவல்கள், வீடியோ காட்சிகள், புகைப்படங்கள் மற்றும் உரையாடல்கள் ஆகியவை பகிரப்பட்டதற்கான தடயங்கள் உள்ளிட்ட டிஜிட்டல் ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆய்வு விரைந்து முடிக்கப்படும் பட்சத்தில், மேலும் எத்தனை சிறுமிகளை சீரழித்து அதனை வீடியோவாக எடுத்துள்ளார் என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும். அந்த வீடியோ காட்சிகள் வேறு யாருக்கும் பகிரப்பட்டுள்ளதா. இந்த வீடியோ காட்சிகளை பதிவு செய்தது யார். இவற்றை பாதுகாப்பாக சேமித்து வைத்ததற்கான பின்னணி என்ன என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தியும், அதற்கான தகவல்களையும் திரட்டி வருகின்றனர்.

காவல் உதவி ஆணையர் உள்பட 3 போலீசாருக்கு சம்மன்

இதன் காரணமாக, ஜெம் வீரமணி தொடர்புடைய வழக்கில் அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது. இதனிடையே, ஜெம் வீரமணி மற்றும் அவரது மகன் சித்தார்த் ஆகியோரால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக உதவியாளர் சாந்தி வெளியிட்ட வீடியோ காட்சிகள் பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது. இந்த வழக்கை இடையில் கைவிட்ட போலீஸ் உதவி கமிஷனர் மற்றும் 2 காவல் ஆய்வாளர்களுக்கு மத்திய குற்றப் புலனாய்வு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: பிறந்தநாள் கொண்டாடிய 15 நாட்களில் கொடூரம்.. மர்ம காய்ச்சலுக்கு ஒரு வயது குழந்தை பலி.. சென்னையில் அச்சம்!!

Follow Us