AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“ரூ.2,700 மருந்து ரூ.27,000க்கா?”.. புற்றுநோய் மருந்து விலையேற்றத்திற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!

Supreme Court Cancer Medicine Price: சில்லறை விற்பனையாளருக்கு ₹2,700-க்குக் கிடைக்கும் புற்றுநோய் மருந்து, வாடிக்கையாளர்களுக்கு ₹27,000-க்கு விற்கப்படுவது அப்பட்டமான பகல் கொள்ளை என உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஜெனரிக் மருந்துகளின் விலையை முறைப்படுத்தக் கோரிய வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது.

“ரூ.2,700 மருந்து ரூ.27,000க்கா?”.. புற்றுநோய் மருந்து விலையேற்றத்திற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!
மாதிரிப் படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 23 Sep 2026 12:15 PM IST

இந்தியாவில் உயர்காப்பு மற்றும் அத்தியாவசிய மருந்துகளின் விலை தாறுமாறாக உயர்ந்து வருவது ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களை மாபெரும் நிதி நெருக்கடிக்கு ஆளாக்கி வருகிறது. குறிப்பாக, புற்றுநோய் போன்ற கொடிய நோய்களுக்கான சிகிச்சைகளில் பயன்படுத்தப்படும் மருந்துகளுக்குச் சில்லறை விற்பனையாளர்களும் தயாரிப்பு நிறுவனங்களும் நிர்ணயிக்கும் கட்டுப்படியாகாத அதிகபட்ச விற்பனை விலை பெரும் சமூகப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் ஜெனரிக் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் விலையைச் சீரமைத்து ஒழுங்குபடுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், மருந்து விற்பனையில் நடைபெறும் சுரண்டல்களுக்கு எதிராகத் தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளது.

இதையும் படிக்க: டிக்கெட் எடுக்காமல் மாட்டிக்கொண்ட இளம் பெண்.. திடீரென ஆடைகளை கிழித்துக்கொண்டு நாடகம்!

நீதிமன்றத்தில் அம்பலமான விலை முறைகேடுகள்:

வழக்கறிஞர்கள் கிஷன் சந்த் ஜெயின் மற்றும் டாக்டர் சஞ்சய் குமார் குல்ஸ்ரேஸ்தா ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள், நீதிபதிகள் சந்தீப் மேதா மற்றும் விக்ரம் நாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தன. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், இந்தியாவில் சுமார் 60,000 பிராண்டுகள் மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ள போதிலும், மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம் வெறும் 1,000 பிராண்டுகளுக்கு மட்டுமே விலை வரம்பை நிர்ணயித்துள்ளது எனச் சுட்டிக்காட்டினர். இதனால் அட்டவணைப்படுத்தப்படாத 83 சதவீத மருந்துகளுக்கு நிறுவனங்கள் தன்னிச்சையாகப் பெருமளவு விலையை உயர்த்தி அச்சிடுகின்றன என்றும், உற்பத்தி விலைக்கும் சந்தை விற்பனை விலைக்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமான இடைவெளி இருப்பதாகவும் ஆதாரங்களுடன் எடுத்துரைத்தனர்.

“இது அப்பட்டமான பகல் கொள்ளை!”:

இந்திய மருந்து நிறுவன கூட்டமைப்பு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், உற்பத்தியாளர்கள் குறைந்த விலைக்குக் கொடுத்தாலும் சில்லறை விற்பனையாளர்கள் கூடுதல் லாபத்திற்காக அதிக விலைக்கு விற்பதாக வாதிட்டார். இதைக் கேட்ட நீதிபதிகள், சில்லறை விற்பனையாளருக்கு ₹2,700-க்குக் கிடைக்கும் ஒரு புற்றுநோய் மருந்து, நோயாளிகளுக்கு ₹27,000-க்கு விற்கப்படுவது அப்பட்டமான பகல் கொள்ளை மற்றும் படுகொலைக்குச் சமம் எனக் கொதிப்படைந்தனர். 10 மடங்கு கூடுதல் லாபம் வைத்து நோயாளிகள் ஏன் ஏமாற்றப்பட வேண்டும் என்றும், இதில் உடனடியாக முடிவெடுக்க வேண்டிய அதிகாரிகள் மௌனம் சாதிப்பது ஆச்சரியமளிப்பதாகவும் சாடினர்.

இதையும் படிக்க: சோப்பு, ஷாம்பு, பற்பசையில் சைவம், அசைவம் குறிக்கும் அடையாளம் கட்டாயம்! மத்திய அரசின் புதிய விதிமுறை..

மத்திய அரசுக்கு உத்தரவு:

மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம். நடராஜ், மருந்து விலை நிர்ணய அமைப்பை மேலும் மேம்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவைக்குத் தெரிவித்தார். அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு விரிவான பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அடுத்த கட்டத்திற்கு ஒத்திவைத்தனர்.

Follow Us