ராதாவுக்கு தங்கம்னாலே வீக்னஸ் – அம்பிகா சொன்ன பரபரப்பு குற்றச்சாட்டு
Ambika Responds to Actress Radha’s Complaint : நடிகை ராதாவின் குற்றச்சாட்டு குறித்து அம்பிகா செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ராதா தங்கத்தை பார்த்தாலே ஒரு மாதிரி ஆகிவிடுவார். தங்கம் ராதாவின் வீக்னஸ்.என்னுடைய தங்கம் கூட அவரிடம் இருக்கிறது. நான் தான் ராதா மேல கேஸ் போடணும் என்றார்.
சென்னை, செப்டம்பர் 23 : 80களில் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருந்த அம்பிகா, ராதா இருவரும் தற்போது ஒருவர் மீது ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றனர். சகோதரிகளான இருவரும் தமிழில் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இவர்களது அடுத்த தலைமுறை வாரிசுகளான அம்பிகாவின் மகள் கார்த்திகாவும், ராதாவின் மகளான துளசியும் தமிழில் அறிமுகமானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ராதா மீது அம்பிகா பரபரப்பு குற்றச்சாட்டு
இந்த நிலையில் செப்டம்பர் 22, 2026 நேற்று செய்தியாளர்களை சந்தித்த நடிகை ராதா தனது சகோதரி அம்பிகா மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது சகோதரி நடிகை அம்பிகாவும் சகோதரர் அர்ஜுன் நாயர் ஆகியோர், தனது கையொப்பமிட்ட காசோலைகளைத் திருடி, சுமார் ரூ.50.8 கோடி மதிப்பிலான பணத்தை மோசடியாகப் பெற முயன்றதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்கள் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க : “சட்டமன்றத்தையே கட் அடிச்சவர் உதயநிதி!”.. துறை அமைச்சர்கள் சர்ச்சை குறித்து அமைச்சர் ரமேஷ் காட்டமான பதிலடி!!




இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நடிகை அம்பிகாவும் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ராதா தங்கத்தை பார்த்தாலே ஒரு மாதிரி ஆகிவிடுவார். தங்கம் ராதாவின் வீக்னஸ்.என்னுடைய தங்கம் கூட அவரிடம் இருக்கிறது. நான் தான் ராதா மேல கேஸ் போடணும் என்றார்.
மேலும் பேசிய அவர் காசோலையை அவர் தான் எங்களுக்கு கொடுத்தார். அது பணம் இல்லாமல் திரும்பி வந்தது. நான் தான் அவர் மீது வழக்கு போட வேண்டும். அவருக்கு தங்கம் என்றால் வீக்னஸ். என்னுடைய நிறைய தங்க நகைகள் அவரிடம் இருக்கிறது. அதைக் கேட்டும் அவர் தரவில்லை. ஏ.ஆர்.எஸ்., சொத்தில் 50 சென்ட் நிலம் பங்கில் மோசடி நடந்துள்ளது. ஏ.ஆர்.எஸ்., கார்டன் ஸ்டூடியோவில் மூன்றில் ஒரு பங்கு எனக்கு உரிமை உள்ளது. நிலம், தங்க நகை மோசடி மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகள் போன்றவற்றை மறைத்து ராதா நாடகமாடுகிறார். அவரின் புகார் உண்மைக்கு புறம்பானது என்றார்.
மேலும் பேசிய அவர், நான் உண்மையை சொன்னால் ராதா தான் சிறைக்கு செல்ல நேரிடும். காசோலையில் கையெழுத்து போட்டுவிட்டு என் வீட்டில் ஏன் அதை வைக்க வேண்டும். ஹேண்ட் பேக்கிற்கே லாக் போடும் ராதா இவ்வளவு பெரிய தொகையை வீட்டில் வைத்துவிட்டு போவாரா?. ராதாவின் மகள் திருமணத்தில் அனைத்து வேலைகளையும் நான் இழுத்து போட்டு வேலைக்காரி போல செய்திருக்கிறேன். ராதா தான் எங்களுக்கு ரூ.97 கோடி தர வேண்டும். ஆனால் என் மீது மோசடி புகார் அளித்தது வேதனை அளிக்கிறது என்றார்.
இதையும் படிக்க : அஜித்தை முதல்வராக்குவதே லட்சியம் – மேலும் ஒரு புதிய கட்சியைத் தொடங்கிய ரசிகர்கள்
மேலும், ஏஆர்எஸ் கார்டன் தொடர்பான விஷயத்தில் தான் பிரச்னை. ஏஆர்எஸ் கார்டன் உருவாக முக்கிய காரணமாக இருந்தது நான் தான். இதை எம்ஜிஆர் கொடுத்தார் என்பது தவறான தகவல். இது என் உழைப்பில் உருவானது. ஏஆர்எஸ் கார்டனில் சொத்தில் இருந்து என் பெயரை நீக்கிவிட்டனர். என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை என்றார்.