AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“சட்டமன்றத்தையே கட் அடிச்சவர் உதயநிதி!”.. துறை அமைச்சர்கள் சர்ச்சை குறித்து அமைச்சர் ரமேஷ் காட்டமான பதிலடி!!

Minister Ramesh Counters Udhayanidhi Stalin: "தவெக ஆட்சியில் யார் அமைச்சர் என்றே தெரியவில்லை" என உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு அமைச்சர் ரமேஷ் காரசாரமான பதிலடி கொடுத்துள்ளார். சட்டமன்றத்தில் முழுமையாக அமர்ந்து கூட்டத்தைக் கவனிக்காமல், வந்த ஒரு மணி நேரத்திலேயே வெளியேறிவிட்டு, பிரச்சார மேடையில் சென்று அமைச்சர் யார் என்று தெரியவில்லை எனக் கூறுவது கிளாஸ் கட் அடிப்பவர்களின் புலம்பல் என விமர்சித்தார்.

“சட்டமன்றத்தையே கட் அடிச்சவர் உதயநிதி!”.. துறை அமைச்சர்கள் சர்ச்சை குறித்து அமைச்சர் ரமேஷ் காட்டமான பதிலடி!!
அமைச்சர் ரமேஷ், உதயநிதி ஸ்டாலின்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 23 Sep 2026 08:48 AM IST

சென்னை, செப்டம்பர் 23: தமிழக அரசியல் களத்தில் ஆளுங்கட்சியான தவெக மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையிலான காரசாரமான விமர்சனங்களும் பதிலடிகளும் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. சட்டமன்றக் கூட்டத்தொடர் மற்றும் தேர்தல் பிரச்சார மேடைகளில் இருதரப்பினரும் மாறி மாறி முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. இந்தச் சூழலில், “தமிழக அரசில் யார் யார் எந்தெந்தத் துறைக்கு அமைச்சராக இருக்கிறார்கள் என்றே தனக்குத் தெரியவில்லை” என்று உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு, அமைச்சர் ரமேஷ் கடுமையான சொற்களால் பதிலடி கொடுத்துப் பேசியுள்ளார்.

இதையும் படிக்க: முதல்வர் விஜய்யுடன் ஏன் லண்டன் செல்லவில்லை? அமைச்சர் கீர்த்தனா ஆதாரத்துடன் விளக்கம்.. என்ன அது!

உதயநிதியின் விமர்சனமும் அமைச்சரின் பதிலடியும்:

சமீபத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், தவெக ஆட்சியில் எந்தெந்தத் துறைக்கு யார் அமைச்சராக இருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை என்றும், வனத்துறை அமைச்சர் யார் என்ற விவரம் தனக்குத் தாமதமாகவே தெரியவந்தது என்றும் எள்ளலுடன் குறிப்பிட்டிருந்தார். அதற்குப் பதிலடி கொடுத்துப் பேசிய அமைச்சர் ரமேஷ், சட்டமன்றப் பட்ஜெட் கூட்டத்தொடர் கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக நடைபெற்று முடிந்துள்ளதைச் சுட்டிக்காட்டினார். சட்டமன்றத்தில் ஒவ்வொரு துறை சார்ந்த அமைச்சர்களும் தங்களது துறைக்கான புதிய அறிவிப்புகளையும் விளக்கங்களையும் விரிவாக வெளியிட்டு வந்ததை நினைவூட்டினார்.

“சட்டமன்றத்தில் கிளாஸ் கட்”:

தொடர்ந்து பேசிய அமைச்சர் ரமேஷ், சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது அவைக்கு வந்து முழுமையாக அமர்ந்து கவனித்திருந்தாலே எந்தெந்தத் துறைக்கு யார் யார் அமைச்சராக இருக்கிறார்கள் என்பது நன்றாகத் தெரிந்திருக்கும் என்றார். சட்டமன்றத்திற்கு வந்தவுடன் ஒரே மணி நேரத்தில் ‘கட் அடித்துவிட்டு’ வெளியே சென்றுவிடும் உதயநிதிக்கு, அவையில் யார் அமைச்சராக இருக்கிறார்கள் அல்லது யார் எம்.எல்.ஏ-வாக இருக்கிறார்கள் என்பது எப்படித் தெரியும் என வினா எழுப்பினார்.

இதையும் படிக்க: அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அவதூறு வழக்கு… நீதிமன்றத்தில் மு.க. ஸ்டாலின் கொடுத்த பதிலடி.. முழு விவரம்!

ஒழுங்காகக் வகுப்பைக் கவனிக்க அறிவுரை:

சட்டமன்ற அவையைப் புறக்கணித்துவிட்டுப் பிரச்சார மேடைகளில் ஏறி நின்று ‘எனக்கு அமைச்சர் யாருன்னே தெரியவில்லை’ என்று பேசுவது கிளாஸ் கட் அடிக்கும் மாணவனின் புலம்பலைப் போல் இருப்பதாக அவர் கேலி செய்தார். இனிமேலாவது சட்டமன்றத்திற்கு வரும்போது நாள் முழுவதும் அவையில் அமர்ந்து ‘கிளாஸை ஒழுங்காகக் கவனிக்க வேண்டும்’ என்றும், அப்படிச் செய்தால் மட்டுமே அமைச்சர் யார், சட்டமன்ற உறுப்பினர் யார் என்பது தெளிவாகப் புரியும் என்றும் அமைச்சர் ரமேஷ் காட்டமாகக் குறிப்பிட்டார்.

Follow Us