AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சோப்பு, ஷாம்பு, பற்பசையில் சைவம், அசைவம் குறிக்கும் அடையாளம் கட்டாயம்! மத்திய அரசின் புதிய விதிமுறை..

New Labeling In Toiletries/Cosmetics: அழகு சாதனங்கள் மற்றும் தனிநபர் பயன்பாட்டுப் பொருட்களின் பேக்கேஜிங்கில் தயாரிப்பு பெயர், உற்பத்தியாளர் முகவரி, அளவு, தொகுதி எண், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, அதிகபட்ச சில்லறை விலை உள்ளிட்ட விவரங்களும் இடம்பெற வேண்டும். பொருட்களில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களும் அவற்றின் அளவின் அடிப்படையில் வரிசைப்படுத்தி குறிப்பிடப்பட வேண்டும்.

சோப்பு, ஷாம்பு, பற்பசையில் சைவம், அசைவம் குறிக்கும் அடையாளம் கட்டாயம்! மத்திய அரசின் புதிய விதிமுறை..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 22 Sep 2026 19:50 PM IST

செப்டம்பர் 22, 2026: சோப்பு, ஷாம்பு, பற்பசை உள்ளிட்ட அழகு சாதனங்கள் மற்றும் தனிநபர் பயன்பாட்டுப் பொருட்கள் சைவமா அல்லது அசைவமா என்பதை நுகர்வோர் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில், அவற்றின் பேக்கேஜிங்கில் கட்டாய அடையாளம் இடம்பெற வேண்டும் என மத்திய அரசு புதிய விதிமுறையை அமல்படுத்தியுள்ளது. சட்ட அளவியல் (தொகுக்கப்பட்ட பொருட்கள்) விதிகள், 2011-ல் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளது. செப்டம்பர் 21-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட சட்ட அளவியல் (தொகுக்கப்பட்ட பொருட்கள்) நான்காவது திருத்த விதிகள், 2026, அரசிதழில் வெளியான நாளிலிருந்தே அமலுக்கு வந்துள்ளன.

சைவமா? அசைவமா? வரும் புதிய மாற்றம்:

இதன்படி, சைவ மூலப்பொருட்களால் தயாரிக்கப்படும் பொருட்களின் பேக்கேஜிங்கில் பச்சை நிறப் புள்ளியும், அசைவ மூலப்பொருட்களைக் கொண்ட பொருட்களில் சிவப்பு அல்லது பழுப்பு நிறப் புள்ளியும் இடம்பெற வேண்டும். இந்த அடையாளம் பேக்கேஜின் பிரதான காட்சிப் பகுதியில் மேல்பகுதியில் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.

இந்த விதிமுறை சோப்பு, ஷாம்பு, பற்பசை, அழகு சாதனங்கள் மற்றும் தனிநபர் பயன்பாட்டுப் பொருட்களுக்கு பொருந்தும். இதன் மூலம் பொருளை வாங்கும்போதே அதன் தன்மையை நுகர்வோர் எளிதாக அறிந்து கொள்ள முடியும்.

மேலும் படிக்க: பள்ளி ஆசிரியையை சுட்டுக்கொன்ற இளைஞர்.. தானும் தற்கொலை செய்துக்கொண்டார்!

புதிய விதிமுறையா?

இந்த அடையாள விதிமுறை முற்றிலும் புதியது அல்ல. தனிநபர் பயன்பாட்டுப் பொருட்களில் சைவம் மற்றும் அசைவத்தை குறிக்கும் பச்சை, சிவப்பு அல்லது பழுப்பு நிறப் புள்ளிகளை பயன்படுத்தும் நடைமுறை, 2014-ஆம் ஆண்டு சட்ட அளவியல் விதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தத்தின் மூலம், இந்த விதி புதிய பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டு, முந்தைய பிரிவு நீக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வழக்கும் தொடரப்பட்டிருந்தது. கடந்த பிப்ரவரி மாதம் டெல்லி உயர்நீதிமன்றம், அழகு சாதனங்கள் மற்றும் தனிநபர் பயன்பாட்டுப் பொருட்களில் இந்த அடையாளம் தொடர்பான விவகாரத்தில் தெளிவான நிலைப்பாட்டை எடுக்குமாறு ஒழுங்குமுறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது.

மேலும் படிக்க: சுற்றுலாப் பகுதிகளில் தேசிய திரைப்பட விருது – மத்திய அமைச்சர் முக்கிய அறிவிப்பு

மேலும், அழகு சாதனங்கள் மற்றும் தனிநபர் பயன்பாட்டுப் பொருட்களின் பேக்கேஜிங்கில் தயாரிப்பு பெயர், உற்பத்தியாளர் முகவரி, அளவு, தொகுதி எண், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, அதிகபட்ச சில்லறை விலை உள்ளிட்ட விவரங்களும் இடம்பெற வேண்டும். பொருட்களில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களும் அவற்றின் அளவின் அடிப்படையில் வரிசைப்படுத்தி குறிப்பிடப்பட வேண்டும்.

Follow Us