AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

உடல் எடையைக் குறைக்க சமந்தா பின்பற்றும் ஃபிட்னஸ் ரகசியங்கள்!

Samantha's Workout: நடிகை சமந்தா உடல் எடையைக் கட்டுப்படுத்த வெயிட் டிரெயினிங், யோகா மற்றும் மூச்சுப் பயிற்சிகளை மேற்கொள்கிறார். பிகில்பால் போன்ற விளையாட்டுகள் மூலம் உடலைச் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்கிறார். உடற்பயிற்சியுடன் சீரான உணவு, போதுமான தூக்கம் மற்றும் ஓய்வுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறார்.

உடல் எடையைக் குறைக்க சமந்தா பின்பற்றும் ஃபிட்னஸ் ரகசியங்கள்!
Image Source: getty
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 11 Nov 2026 10:30 AM IST

நடிகை சமந்தா உடல் எடையைக் கட்டுப்படுத்தவும் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வருகிறார். தனது பயிற்சியில் வெயிட் டிரெயினிங்கிற்கு முக்கியத்துவம் அளிக்கிறார். டம்பெல்ஸ், ஸ்குவாட்ஸ், டெட்லிஃப்ட்ஸ் போன்ற பயிற்சிகள் மூலம் தசைகளின் வலிமையை அதிகரிக்கிறார். யோகா மற்றும் மூச்சுப் பயிற்சிகள் மூலம் உடல் நெகிழ்வுத்தன்மையையும் மன அமைதியையும் மேம்படுத்துகிறார். பிகில்பால் போன்ற விளையாட்டுகளிலும் ஈடுபட்டு உடலைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கிறார். உடற்பயிற்சியுடன் சீரான உணவு, போதுமான தண்ணீர் மற்றும் நல்ல தூக்கத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கிறார். உடல் சோர்வாக இருக்கும்போது ஓய்வெடுத்து, உடல்நிலைக்கு ஏற்ப பயிற்சிகளை மேற்கொள்வதிலும் கவனம் செலுத்துகிறார்.

Also Read: சர்க்கரைக்கு நோ சொல்லும் தமிழ் சினிமா நட்சத்திரங்கள்! ரகசியம் இதுதானா?

ரசிகர்களைக் கவர்ந்து வருபவர் நடிகை சமந்தா

திரையுலகில் தனது நடிப்பால் மட்டுமின்றி, உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையாலும் ரசிகர்களைக் கவர்ந்து வருபவர் நடிகை சமந்தா ரூத் பிரபு. உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தும் இவர், உடற்பயிற்சியைத் தனது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக வைத்துள்ளார். குறிப்பாக, உடல் எடையைக் கட்டுப்படுத்துவது மட்டுமின்றி, தசைகளின் வலிமை, உடல் இயக்கம் மற்றும் மனநலத்தை மேம்படுத்தும் பயிற்சிகளுக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறார்.

வெயிட் டிரெயினிங் பயிற்சி

சமந்தாவின் உடற்பயிற்சி முறையில் வெயிட் டிரெயினிங் முக்கிய இடம் பிடித்துள்ளது. டம்பெல்ஸ் பயன்படுத்தி உடற்பயிற்சி செய்வது, ஸ்குவாட்ஸ், டெட்லிஃப்ட்ஸ் மற்றும் தோள்பட்டை தசைகளுக்கான பயிற்சிகள் போன்றவற்றை மேற்கொள்கிறார். இந்தப் பயிற்சிகள் தசைகளின் வலிமையை அதிகரிக்கவும், உடலின் வளர்சிதை மாற்றச் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகின்றன. குறிப்பாக, பெண்கள் வயதாகும்போது தசைகளின் வலிமையைப் பராமரிக்க வெயிட் டிரெயினிங் அவசியம் என சமந்தா வலியுறுத்தியுள்ளார்.

யோகா மற்றும் மூச்சுப் பயிற்சி

உடலுக்கு வலிமை அளிக்கும் பயிற்சிகளுடன் யோகா மற்றும் மூச்சுப் பயிற்சிகளுக்கும் சமந்தா முக்கியத்துவம் கொடுக்கிறார். யோகா செய்வதன் மூலம் உடலின் நெகிழ்வுத்தன்மை, சமநிலை மற்றும் மன அமைதியை மேம்படுத்த முடியும். மன அழுத்தத்தைக் குறைத்து உடலையும் மனதையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க இந்தப் பயிற்சிகள் உதவுகின்றன.

பிகில்பால் விளையாட்டு

ஜிம்மில் மட்டுமே உடற்பயிற்சி செய்வதற்குப் பதிலாக, விளையாட்டு மூலமாகவும் உடலைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கிறார். அந்த வகையில் பிகில்பால் விளையாட்டில் ஆர்வம் கொண்டுள்ள சமந்தா, இதன் மூலம் உடல் இயக்கம், சுறுசுறுப்பு மற்றும் சகிப்புத்தன்மையை மேம்படுத்துகிறார்.

Also Read: சர்க்கரைக்கு நோ சொல்லும் தமிழ் சினிமா நட்சத்திரங்கள்! ரகசியம் இதுதானா?

போதுமான ஓய்வும் அவசியம்

தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்வது எந்த அளவிற்கு முக்கியமோ, அதே அளவிற்கு உடலுக்குப் போதுமான ஓய்வு கொடுப்பதும் அவசியம் என்பதை சமந்தா வலியுறுத்துகிறார். உடல் சோர்வாக இருக்கும் நாட்களில் பயிற்சியின் தீவிரத்தைக் குறைப்பது அல்லது ஓய்வெடுப்பது அவரது அணுகுமுறையாக உள்ளது. மேலும், சீரான உணவு, போதுமான தண்ணீர் மற்றும் நல்ல தூக்கத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கிறார்.

குறிப்பு: சமந்தாவின் உடற்பயிற்சி முறை அனைவருக்கும் பொருந்தும் எடை குறைப்பு திட்டம் அல்ல. ஒவ்வொருவரின் உடல்நிலை மற்றும் உடற்பயிற்சி திறனுக்கு ஏற்ப பயிற்சிகளைத் தேர்வு செய்வது அவசியம். புதிய உடற்பயிற்சிகளைத் தொடங்குவதற்கு முன்பு தகுந்த நிபுணரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.

Follow Us