AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அனிருத் – காவ்யா மாறனின் காதல் கிசு கிசு முதல் கல்யாணம் வரை…. ஒரு ரீவைண்ட்!

Anirudh and Kaviya Maran wedding | தமிழ் சினிமாவில் இன்று இரண்டு முக்கிய பிரபலங்களான அனிருத் மற்றும் காவ்யா மாறனின் திருமணம் நடைபெறுகின்றது. இவர்களின் காதல் முதல் திருமணம் வரையிலான கிசு கிசுக்கள் என்ன நடந்தது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அனிருத் – காவ்யா மாறனின் காதல் கிசு கிசு முதல் கல்யாணம் வரை…. ஒரு ரீவைண்ட்!
அனிருத் - காவ்யா மாறன்
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 11 Nov 2026 10:59 AM IST

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய மொழிகளில் ராக்ஸ்டார் அனிருத் (Anirudh Ravichander) என்று கொண்டாடப்படுபவர் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர். இவரது இசையில் வெளியாகும் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பான் இந்திய மொழிகளில் பிரபல இசையமைப்பாளராக வலம் வரும் இசையமைப்பாளர் அனிருத் பல ஆண்டுகளாக மோஸ்ட் எலிஜிபில் பேச்சுலராக வலம் வருகிறார். இந்த நிலையில் அனிருத் சினிமாவில் அறிமுகம் ஆனதில் இருந்து அவரைச் சுற்றி பல காதல் கிசுகிசுக்களும் வலம் வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த 2025-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனுடன் (Kavya Maran) நியூயார்க் நகரில் வலம் வந்த வீடியோ இணையத்தில் கசிந்து வைரலானது.

அந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து இவர்கள் தொடர்பான செய்திகளும் தொடர்ந்து வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனிருத் மற்றும் காவ்யா மாறனுக்கும் திருமணம் நடைபெறுவதாகவும் அது எங்கு நடைபெறுகிறது என்பது தொடர்பான செய்திகளும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.

Also Read… ரிலீஸிற்கு இன்னும் 10 நாள் தான் இருக்கு… ஓம் படக்குழு வெளியிட்ட நியூ போஸ்டர்

அனிருத் – காவ்யா மாறனின் காதல் கிசு கிசு முதல் கல்யாணம் வரை:

இந்த நிலையில் இன்று 11-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு கிரீஸ் நாட்டில் இசையமைப்பாளர் அனிருத் மற்றும் காவ்யா மாறனுக்கு உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெறுகின்றது. இதனைத் தொடர்ந்து சென்னையில் மிகவும் பிரமாண்டமாக இவர்களின் திருமண வரவேற்பு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து காதல் கிசு கிசுவில் இருந்து திருமணத்தின் மூலம் தம்பதிகளாக மாறும் இவர்களுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருவது குறிப்பிடதக்கது. இந்த திருமணத்தின் மூலம் திமுக கட்சியில் உள்ள பிரபலங்கள் மற்றும் ரஜினிகாந்த் குடும்பத்தினர் உறவினர்களாக மாற உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read… பிக்பாஸில் ஜூனியர் பாஸை மாற்றும் முடிவில் போட்டியாளர்கள்… எதிர்க்கும் முத்தழகி – அனல்பறக்கும் புரோமோ இதோ

Follow Us