பாக்கு வெத்தல மாத்தி முடிச்சி பையன் வந்தாச்சு… அனிருத் – காவியா மாறனின் திருமணம் எப்போது? எங்கு நடைபெறுகிறது?
Anirudh and Kavya Maran Wedding: தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரங்கள் முதல் சாதாரண நடிகர்கள் படங்களுக்கு இசையமைப்பாளராக இசையமைத்து ஹிட் பாடல்களை கொடுத்துவருபவர் அனிருத் ரவிச்சந்தர். இவர் காவியா மாறனை திருமணம் செய்யவுள்ளார். இவர்கள் திருமணம் எப்போது மற்றும் எங்கு நடைபெறுகிறது என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.
கோலிவுட் சினிமாவில் பல்வேறு உச்ச நடிகர்களின் திரைப்படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றி மக்கள் மத்தியில் மிகவும் நெருக்கமானவர் ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் (Anirudh Ravichander). இவரின் இசையில் முதல்வர் விஜய் (CM Vijay) முதல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth) வரை பல்வேறு நட்சத்திர நடிகர்களின் படங்கள் வெளியாகியிருக்கிறது. அதிலும் இவரின் இசையில் இறுதியாக தமிழில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த திரைப்படம்தான் ஜெயிலர் 2 (Jailer 2). இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க, நெல்சன் திலீப்குமார் இசையமைத்திருந்தார். இந்த வெற்றிகொண்டாட்டத்துடன் அனிருத் தனது நீண்டநாள் காதலியும், சன் ரைஸஸ் ஆப் ஹைதராபாத் அணியின் மேலாளர் காவியா மாறனை (Kavya Maran) திருமணம் செய்யவுள்ளார்.
இவர்களின் திருமணம் மிக பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள நிலையில், எங்கு மற்றும் எப்போது நடைபெறுகிறது என்பது குறித்த தகவல்களை இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது. அது குறித்த விவரங்களை விரிவாக பார்க்கலாம்.




இதையும் படிங்க: சண்டியர் திரைப்படத்தின் ஷூட்டிங்கில் இணைந்த கமல்ஹாசன் – வைரலாகும் போட்டோ!
அனிருத் – காவியா மாறனின் திருமணம் எங்கு? எப்போது?
அனிருத் மற்றும் காவியா மாறன் இருவருமே சில வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்கள் இருவருமே வெளிநாடுகளில் ஒன்றாக சுற்றித்திரியும் வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிவந்தது. அந்த விதத்தில் ஜெயிலர் 2 படத்தின் வெளியீட்டின்போதே இவர்கள் இருவரின் திருமணம் குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக உறுதியாகியிருந்தது.
காவியா மாறன் மற்றும் அனிருத் இருவருமே திருமணம் செய்யவுள்ள நிலையில், எங்கு நடைபெறுகிறது என பலரும் எதிர்பார்த்திருந்தனர். இவர்கள் இருவரின் திருமணம் கிரீஸ் நாட்டில் மிக பிரம்மாண்டமாக நடைபெறுகிறதாம். நவம்பர் 11ம் தேதியில் இவர்கள் இருவரின் திருமணம் நடைபெறுகிறதாம்.
அனிருத் மற்றும் காவியா மாறனின் திருமணத்தில் பங்குபெறும் பிரபலங்கள்;
இவர்கள் இருவரின் திருமணமானது மிக பிரம்மாண்டமாக நெருங்கிய உறவினர்கள் மத்தியில் நடைபெறுகிறதாம். மேலும் ஆந்திர முதல்வர், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலி மற்றும் அவரின் குடும்பம் இணைந்து இந்த திருமணத்தில் பங்குபெறுகிறார்களாம்.
இதையும் படிங்க: இந்த பிராங் நல்லா இல்ல.. ஜூனியர் பிக் பாஸ் கொடுத்த சீக்ரட் டாஸ்க்கால் காண்டான போட்டியாளர்கள்!
அனிருத்தின் திருமணம் குறித்து இணையத்தில் பரவிவரும் பதிவு:
💍 The wedding of the year is tomorrow.
Anirudh Ravichander and Kavya Maran will reportedly marry in Greece on November 11, with a grand reception in Chennai on November 21.
Cinema, cricket and politics all in one place 🔥 #KavyaMaran #Anirudh https://t.co/pFvRuNkzWS— Yash (@iyashkumawat) November 10, 2026
அனிருத் மற்றும் காவியா மாறனின் திருமணம் கிரீஸ் நாட்டில் நடக்கும் நிலையில், அதை தொடர்ந்து வரும் 2026ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதியில், சென்னையில் இவர்களின் திருமணம் வரவேற்பு நிகழ்வு நடைபெறுமாம். இதில் தமிழக முதல்வர் உட்பட பல்வேறு நட்சத்திர நடிகர்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.