AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Anirudh: இசையமைப்பில் அழுத்தம் இருக்கிறதா? – விளக்கமாக பேசிய அனிருத்!

Anirudhs Pressure-Free Music: தற்போது பான் இந்திய இசையமைப்பாளர்களில் ஒருவராக புகழப்பட்டுவருபவர் அனிருத் ரவிச்சந்தர். அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அனிருத், அதில் இசையமைப்பில் தனக்கு அழுத்தம் உள்ளதா மற்றும் இசையமைப்பு குறித்து விளக்கமாக பேசியுள்ளார். அது குறித்து தெளிவாக பார்க்கலாம்.

Anirudh: இசையமைப்பில் அழுத்தம் இருக்கிறதா? – விளக்கமாக பேசிய அனிருத்!
அனிருத்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 13 Aug 2026 19:28 PM IST

கோலிவுட் சினிமாவின் மூலம் இசையமைப்பாளராக நுழைந்து, தற்போது பான் இந்திய மொழிகளுக்கு இசையமைத்துவருபவர்தான் அனிருத் ரவிச்சந்தர் (Anirudh Ravichander). இவர் தென்னிந்திய மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். தனுஷின் (Dhanush) 3(Moonu) என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக இவர், தற்போது ஷாருக்கான் (Shah Rukh Khan) போன்ற பாலிவுட் நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்துவருகிறார். இவரின் இசையமைப்பில், இறுதியாக வெளியாகி திரையரங்குகளை தெறிக்கவிட்டுவரும் திரைப்படம்தான் டிசி (DC). இதில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) ஹீரோவாக நடித்துள்ளார்.

இந்த படமானது திரையரங்குகளில் சிறப்பான வரவேற்பை பெற்றுவரும் நிலையில், அதில் அனிருத்தின் இசைக்குத்தான் மெயின் பங்கு இருக்கிறது. மேலும் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக அனிருத் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியின்போது ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அனிருத் விளக்கமாக பதிலளித்துள்ளார்.

இதையும் படிங்க: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட ரிலீஸ்.. திருப்பதியில் மொட்டையடித்த இயக்குநர் வெங்கி அட்லூரி!

இசையமைப்பில் அழுத்தம் இருக்கிறதா என்பது குறித்து அனிருத் விளக்கம்:

அந்த நிகழ்ச்சியில் ரசிகர் ஒருவர், “உங்களுக்கு இசையமைப்பில் அழுத்தம் இருக்குமா?, அதை எப்படி சமாளிக்கிறீர்கள்?” என கேள்வி கேட்டார். அதற்கு அனிருத், “அப்படி பீல் பண்ணிவிட்டோம் என்ற நம்ம காலி. எந்த ஹீரோவாக இருந்தாலும், எந்த தயாரிப்பாளராக இருந்தாலும் மற்றும் எவ்வளவு பெரிய இயக்குநராக இருந்தாலும், நம்ம நமது வேலையை பார்த்தால் நல்லது.

இதையும் படிங்க: செப்டம்பருக்கு தள்ளிப்போன துல்கர் சல்மானின் ஐ அம் கேம் படத்தின் ரிலீஸ்… சோகத்தில் ரசிகர்கள்

என் நம்பிக்கை என்னவென்றால், இசையமைப்பதற்கு எனக்கு மிகப்பெரிய சம்பளம் கொடுக்குறாங்க. அந்த சம்பளத்தை எதற்காக கொடுக்குறாங்க. உதாரணமாக, 10 பேர் திரையரங்கிற்கு வந்தால், என் பாடல்களைக் கொண்டு அந்த எண்ணிக்கையை 13/14 ஆகப் பெருக்க வேண்டும். அதுதான் நமது இலக்கு. இதை எனது முதல் படத்திலிருந்து நான் பின்பற்றிவருகிறேன்” என அதில் அனிருத் விளக்கமாக பேசியிருந்தார்.

இசையமைப்பில் அழுத்தம் குறித்து அனிருத் பேசிய வீடியோ பதிவு:

அனிருத்தின் இசையில் தளபதி விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் வெளியாகியிருந்தது. இதையடுத்து சிலம்பரசனின் அரசன், ரஜினியின் தர்மன், அஜித்தின் டேர் டெவில், நானியின் தி பாரடைஸ் மற்றும் ஷாருக்கானின் கிங் உள்ளிட்ட பல்வேறு படங்களை தனது கைவசத்தில் அனிருத் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us