Anirudh: தனது இசையில் பாக்ஸ் ஆபிஸ் தோல்வி படங்கள் – அனிருத் பகிர்ந்த விஷயம்!
Anirudh on Box Office Failures: பான் இந்திய இசையமைப்பாளர்களில் ஒருவராக வளர்ந்துவருபவர் அனிருத் ரவிச்சந்தர். அண்மையில் நேர்காணல் ஒன்றில் இவர் கலந்துகொண்ட நிலையில், தனது இசையில் பாக்ஸ் ஆபிஸ் தோல்வியில் முடியும் படங்கள் பற்றி பேசியுள்ளார். அவர் அப்படி என்ன சொன்னார் என பார்க்கலாம்.
தென்னிந்திய சினிமா வட்டாரங்களில் இசையின் மூலம் ரசிகர்களை ஈர்த்துவருபவர் ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் (Rockstar Anirudh Ravichander). இவரின் இசையமைப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth) முதல் ஷாருக்கான் (Shah Rukh Khan) போன்ற பான் இந்திய படங்கள் வெளியாகியிருக்கிறது. தற்போது இவர், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் இசையமைப்பாளராக பணியாற்றிவருகிறார். தமிழக முதல்வர் விஜய் (CM Vijay) இறுதியாக நடித்திருந்த ஜன நாயகன் (Jana Nayagan) படத்திலும் இசையமைப்பாளராக பணியாற்றியிருந்தார். மேலும் தளபதி கச்சேரி (Thalapathy Katcheri) என்ற பாடலிலும் நடனமாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷின் 3 என்ற திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமான இவர், பான் இந்திய மொழி படங்களிலும் பணியாற்றிவருகிறார். மேலும் சமீபத்தில் லோகேஷ் கனகராஜின் நடிப்பில் வெளியான டிசி (DC) படத்திலும் இசையமைத்திருந்தார்.
இந்த படத்தில் அனிருத்தின் இசை மாபெரும் துணையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சமீபத்தில் ஆங்கில நேர்காணல் ஒன்றில் அனிருத் கலந்துகொண்டிருந்தனர். அதில் தனது இசையில் பாக்ஸ் ஆபிஸ் தோல்வியில் முடிந்த படங்கள் பற்றி பேசியிருக்கிறார்.




இதையும் படிங்க: சூர்யாவின் பிரசன்னமும்.. மமிதாவின் குறும்பும்.. பேமிலி ஆடியன்ஸை ஈர்க்கும் விஸ்வநாத் & சன்ஸ் எப்படி இருக்கு?
தனது இசையில் பாக்ஸ் ஆபிஸ் தோல்வி படங்களை சமாளிப்பது குறித்து அனிருத் விளக்கம்:
அதில் பேசிய அனிருத், “சில சமயங்களில், ஒரு படம் சரியாகப் போகாதபோது, கொஞ்சம் வருத்தமாக இருக்கும். ஏனென்றால், ஒவ்வொரு படத்திற்கும் நாங்கள் எவ்வளவு நேரத்தையும் உழைப்பையும் கொடுக்கிறோம் என்பது ஸ்டுடியோவிற்குள் இருக்கும் எங்களுக்குத் தெரியும்.
இதையும் படிங்க: ரஜினிகாந்த் சாரை முதன்முதலில் சந்தித்த போது… நடிகை ஸ்ரேயா சரணின் சுவாரஸ்ய பேச்சு
சில படங்களின், சில காட்சிகள் எங்களுக்குச் சாதகமாக அமையாதபோதும், எது சரியாக அமையவில்லை என்பதைப் புரிந்துகொள்ள, எங்களால் முடிந்தவரை முயற்சிப்போம். மேலும், எங்கள் பார்வையில், அந்த அம்சங்களையும் மறைக்க அல்லது மேம்படுத்த முயற்சிப்போம்” என அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.
பாக்ஸ் ஆபிஸ் தோல்வி படங்களை சமாளிப்பது குறித்து அனிருத் பேசியது தொடர்பான எக்ஸ் பதிவு:
Q: HOW DO YOU DEAL WITH BOX OFFICE FAILURE ?#Anirudh:
– Sometimes, when a film doesn’t do well, you feel a little bad because we know, within the studio, how much time and effort we put into every film.– Even when certain scenes are not working for us, we try our level best… pic.twitter.com/S3OhK7jxt6
— Movie Tamil (@_MovieTamil) August 13, 2026
அனிருத் தற்போது தனது கைவசத்தில், ரஜினிகாந்த் கமல்ஹாசனின் கூட்டணி படம், ரஜினியின் தர்மன், நானியின் தி பாரடைஸ், சிம்புவின் அரசன், ஜெயிலர் 2, ஷாருக்கானின் கிங், அல்லு அர்ஜுனின் AA23 போன்ற பல்வேறு படங்களை தனது கைவசத்தில் வைத்துள்ளார். மேலும் புத்த படங்களிலும் ஒப்பந்தமாகிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.