AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ரிலீஸிற்கு இன்னும் 10 நாள் தான் இருக்கு… ஓம் படக்குழு வெளியிட்ட நியூ போஸ்டர்

OM Movie New Poster Out Now | தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஓம். இந்தப் படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் புது போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ரிலீஸிற்கு இன்னும் 10 நாள் தான் இருக்கு… ஓம் படக்குழு வெளியிட்ட நியூ போஸ்டர்
ஓம் படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 10 Nov 2026 12:08 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் (Actor Dhanush). இவரது நடிப்பில் பான் இந்திய மொழிகளில் தொடர்ந்து படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தமிழ் சினிமாவில் அதிக அளவில் படங்களில் நடித்து வரும் நடிகர் தனுஷ் நட்டிப்பில் கடந்த 2025-ம் ஆண்டில் மூன்று மொழிகளில் தொடர்ந்து மூன்று படங்கள் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இந்த 2026-ம் ஆண்டில் அடுத்தடுத்து நடிகர் தனுஷ் நடிப்பில் தமிழ் சினிமாவில் படங்கள் வரிசையாக வெளியாகி வருகின்றது. மேலும் அடுத்தடுத்தப் படங்களிலும் பிசியாக நடிகர் தனுஷ் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் ஓம்.

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார். இவரது இயக்கத்தில் முன்னதாக வெளியான அமரன் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததைத் தொடர்ந்து தற்போது இந்த ஓம் சாப்டர் ஒன் படமும் மாபெரும் வரவேற்பைப் பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மம்முட்டி முக்கிய வேடத்தில் நடித்து உள்ளார்.

தனுஷின் ஓம் படக்குழு வெளியிட்ட நியூ போஸ்டர்:

இவர்களுடன் இணைந்து நடிகர்கள் சாய் பல்லவி, ஸ்ரீ லீலா மற்றும் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ள நிலையில் படம் வருகின்ற 20-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… ஜூனியர் பிக்பாஸிடம் சண்டைக்கு நிக்கும் சாதிகா… வைரலாகும் புரோமோ வீடியோ!

ஓம் படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… அனிருத்தின் திருமணத்திற்காக சென்னையில் இருந்து புறப்பட்ட ரஜினிகாந்தின் குடும்பம்!

Follow Us