AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தனுஷின் ஓம் படத்திலிருந்து வெளியானது ஃப ஃப ஃப பாடல் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

Fa Fa Fa from the OM movie | நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி தற்போது திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் ஓம். இந்தப் படத்தில் இருந்து இன்று தீபாவளியை முன்னிட்டு அடுத்த பாடலைப் படக்குழு வெளியிட்டுள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தனுஷின் ஓம் படத்திலிருந்து வெளியானது ஃப ஃப ஃப பாடல் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
ஓம் படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 08 Nov 2026 19:03 PM IST

தமிழ் சினிமாவில் தொடர்ந்து தனது படங்களின் மூலம் ஹிட் அடித்து உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய மொழிகள் மற்றும் ஹாலிவுட்டிலும் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகின்றது. கடந்த ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளில் படங்கள் வரிசையாக வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்த நிலையில் இந்த 2026-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் மட்டும் நடிகர் தனுஷின் நடிப்பில் அடுத்தடுத்தப் படங்களின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. அந்த வகையில் இந்த 2026-ம் ஆண்டின் தொடக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் கர படம் திரையரங்குகளில் வெளியானது.

இந்த நிலையில் வருகின்ற 20-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் தமிழ் சினிமாவில் அடுத்ததாக ஓம் சாப்டர் ஒன் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தினை இயக்குநர் ராஜ்குமார் பெரிய சாமி எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து தென்னிந்திய திரையுலகில் பிரபலங்கள் பலர் இணைந்து நடித்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தனுஷின் ஓம் படத்திலிருந்து வெளியானது ஃப ஃப ஃப பாடல்:

மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ள நிலையில் சமீபத்தில் இசை வெளியீட்டு விழா நடைப்பெற்றது. படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தொடர்ந்து படம் தொடர்பான அப்டேட்களும் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் இந்த ஓம் படத்தில் இருந்து இந்து தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஃப ஃப ஃப என்ற சிங்கிள் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அது தற்போது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… பிக்பாஸில் ரேங்கிங் டாஸ்க் குறித்து போட்டியாளர்களிடையே கேள்வி எழுப்பும் விஜய் சேதுபதி – வைரலாகும் வீடியோ

ஓம் படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… இரண்டு நாட்களில் சூர்யாவின் சீன் படத்தின் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? வைரலாகும் தகவல்!

Follow Us