அவினாஷிற்காக எவிக்ஷன் ஃப்ரீ பாஸை பயன்படுத்திய ஜேசன்… டபுள் எவிஷனை உறுதி செய்த விஜய் சேதுபதி… ட்விஸ்ட் மேல ட்விஸ்டாக வெளியானது பிக்பாஸ் புரோமோ!
Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த சீசனில் மூன்று போட்டியாளர்களுக்கு எவிக்ஷன் ஃப்ரீ பாஸ் வழங்கப்பட்டு இருந்தது. அந்த பாஸை அவர்களுக்காகவோ அல்லது மற்றவர்களுக்காகவோ பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பிக்பாஸ் அறிவுறுத்தி இருந்தார்.
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கி இன்றுடன் 63 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் மாதம் முதல் வாரம் மிகவும்கோலாகலகமாக தொடங்கப்பட்டது. தொடர்ந்து முதலில் 19 போட்டியாளர்கள் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 (Bigg Boss Tamil Season 10) வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர். அதனைத் தொடர்ந்து 5 போட்டியாளர்கள் வைல்கார்ட் போட்டியாளர்களாக பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சிக்குள் அனுப்பப்பட்டனர். இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து தொடர்ந்து வாரம் வாரம் புதுப் புது டாஸ்குகள் வழங்கப்பட்டு போட்டியாளர்களுக்கு பல சலுகைகளும் அளித்து வந்தனர். அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் போட்டியாளர்களான ஷமா, ஜேசன் மற்றும் டிடிஎஃப் வாசன் ஆகியோருக்கு எவிக்ஷன் ஃப்ரீ பாஸ் வழங்கப்பட்டது. இந்த பாஸை 10-வது வாரத்திற்குள் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
கடந்த 7-வது வாரம் இந்த எவிக்ஷன் ஃப்ரீ பாஸ் இருந்தும் அதனைப் பயன்படுத்தாமல் ஷமா போட்டியில் இருந்து வெளியேறினார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அதற்கு பார்வையாளர்கள் கான்ஃபிடன்ஸ் இருக்கலாம் ஓவர் கான்ஃபிடன்ஸ் இருந்தால் அது இப்படி தான் முடியும் என்று கருத்து தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் எவிக்ஷனில் இருந்து முகேஷை டிடிஎஃப் வாசன் தனது பாஸை பயன்படுத்தி காப்பற்றினார்.




ட்விஸ்ட் மேல ட்விஸ்டாக வெளியானது பிக்பாஸ் தமிழ் சீசன் 10 புரோமோ:
இந்த நிலையில் இந்த 9-வது வார இறுதியில் எவிக்ஷனுக்காக அவினாஷ், அஸ்மிதா, அக்ஷிதா மற்றும் ஜேசன் என 4 பேரும் நிற்கிறார்கள். அப்போது எவிக்ஷன் ஃப்ரீ பாஸை ஜேசன் பயன்படுத்துகிறாரா என்று விஜய் சேதுபதி கேட்க ஜேசன் அந்த பாஸை தனக்கு பயன்படுத்தி கொள்ளாலம் அவினாஷை காப்பாற்றுவதாக தெரிவித்தார்.
மேலும் அந்த புரோமோவிலேயே அக்ஷிதா வெளியேறுவதாக விஜய் சேதுபதி தெரிவித்தார். இந்த நிலையில் தற்போது வெளியான புரோமோவில் மேலும் ஒருவர் வெளியேறுவது குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய எபிசோட் தீபாவளிக்காக கொண்டாட்டமாக இல்லாமல் பதட்டமாகவே இருக்கும் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
Also Read… தியேட்டரில் 25 நாட்களைக் கடந்தது ஜெயிலர் 2 படம்… கொண்டாட்டத்தில் படக்குழு
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day63 #Promo3 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/6f2C7spJLr
— Vijay Television (@vijaytelevision) November 8, 2026
Also Read… நாகர்ஜுனாவின் கிங் 100 படத்தில் இணைந்த அசோக் செல்வன் – இயக்குநர் வெளியிட்ட பதிவு