AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கந்த சஷ்டி விழாவுக்கு தயாராகும் முருகன் கோவில்கள்! தரிசன நேரம் மாற்றம்..?

Kanda Sashti Festival: கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திருத்தணி, திருச்செந்தூர், கோவை மருதமலை, சிக்கல் உள்ளிட்ட முக்கிய முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் விழா ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. திருத்தணியில் குறிப்பிட்ட நேரங்களில் தரிசனக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மருதமலையில் நவம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் மலைப்பாதையில் வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கந்த சஷ்டி விழாவுக்கு தயாராகும் முருகன் கோவில்கள்! தரிசன நேரம் மாற்றம்..?
கந்த சஷ்டிImage Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 08 Nov 2026 19:30 PM IST

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா நவம்பர் 10-ம் தேதி தொடங்கி 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி, ஆறு நாட்களும் மூலவர் முருகப்பெருமானுக்கு புஷ்ப அலங்காரம், பட்டாடை அலங்காரம், தங்கக் கவசம், திருவாபரணம், வெள்ளிக் கவசம், சந்தனக் காப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட உள்ளன. விழாவின் முக்கிய நிகழ்வாக நவம்பர் 15-ம் தேதி மாலை புஷ்பாஞ்சலியும், 16-ம் தேதி காலை உற்சவர் திருக்கல்யாணமும் நடைபெற உள்ளன. முருகப்பெருமான் வேல் வாங்கும் சிறப்பு நிகழ்வைக் காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: லட்சுமி தேவியின் ஆசீர்வாதம் வேண்டுமா? தீபாவளி இரவில் இதை செய்யுங்க!

பக்தர்களுக்கு தரிசன நேரக் கட்டுப்பாடு

விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெறுவதால் திருத்தணி கோவிலில் சில நேரங்களில் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படாது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, நவம்பர் 10-ம் தேதி மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், நவம்பர் 11 முதல் 14-ம் தேதி வரை தினமும் காலை 8 மணி முதல் 10.30 மணி வரையிலும் தரிசனத்துக்கு அனுமதி இல்லை. நவம்பர் 15-ம் தேதி மாலை 7.30 மணி முதல் இரவு 10.30 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாது.

திருச்செந்தூரில் சூரசம்ஹாரத்துக்கு சிறப்பு ஏற்பாடுகள்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் நவம்பர் 10-ம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்குகிறது. இங்கு விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்காக தங்கும் கூடாரங்கள், குடிநீர், கழிப்பறை மற்றும் மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. நவம்பர் 15-ம் தேதி கடற்கரையில் நடைபெற உள்ள சூரசம்ஹார நிகழ்ச்சியைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுநாள் நவம்பர் 16-ம் தேதி சுவாமிக்கும் தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

மருதமலையில் வாகனங்களுக்கு இரண்டு நாட்கள் தடை

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் நவம்பர் 10-ம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்குகிறது. நவம்பர் 15-ம் தேதி பிற்பகல் 3 மணியளவில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதையொட்டி பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு நவம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் மலைப்பாதையில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் படிக்கட்டுப் பாதை அல்லது கோவில் பேருந்துகளைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.

Also Read: லட்சுமி தேவியின் ஆசீர்வாதம் வேண்டுமா? தீபாவளி இரவில் இதை செய்யுங்க!

சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் விழா தொடக்கம்

நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் கந்த சஷ்டி விழா நவம்பர் 9-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இங்கு நவம்பர் 14-ம் தேதி தேரோட்டம் மற்றும் வேல் வாங்கும் நிகழ்ச்சியும், நவம்பர் 15-ம் தேதி சூரசம்ஹாரமும் நடைபெற உள்ளன. தொடர்ந்து நவம்பர் 16-ம் தேதி தெய்வசேனை திருக்கல்யாணமும், 17-ம் தேதி வள்ளி திருக்கல்யாணமும் நடைபெற உள்ளன. முருகப்பெருமான் வேல் வாங்கும் சிறப்பு நிகழ்வைக் காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us